காத்தான்குடி: இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறும் ‘தயட்ட செவண’ தேசிய மரநடுகை விழா சுப நேரம் காலை 10.03மணிக்கு புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலக மட்டத்திலான இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்,புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலய அதிபர் தாஸிம்,காத்தான்குடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கருணாகரம்,பிரதேச செயலக விவசாய போதனாசிரியர் திருமதி ரவிசங்கர்,பிரதேச செயலக சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி பரமேஸ்வரன்,167பி சமுர்த்தி உத்தியோகத்தர் மர்சூகா றபீக்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,முகாமையாளர்கள்,பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உதவிப்பிரதேச செயலாளர்,மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உள்ளிட்ட அதிதிகள் உரையாற்றினர்.
இதேவேளை ‘தயட்ட செவண’ தேசிய மரநடுகை விழாவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மட்டக்களப்பு பாலமீன்மடு கிராமத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் 14பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இவ்விழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.





Leave a comment