காத்தான்குடி: இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்ததான நிகழ்வு நாளை சனிக்கிழமை இலங்கை செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிக் காரியாலயத்தில் செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடி கிளைத் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் தலைமையில் நடைபெறவுள்ளதாக செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடி கிளை தொண்டர் இணைப்பாளர் சலீம் தெரிவித்தார்.
‘உயிர் காக்க உதவுவோம் நமக்காக நாமாவோம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இவ் இரத்ததான நிகழ்வில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எம்.அஸ்பர், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் டீ.வசந்தராஜா,காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நசிர்தீன்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி அதிகாரி டாக்டர் திருமதி டீஇயாலினி,காத்தான்குடி கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் சாகலசூரிய,பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.ரீ.எம்.காலித்,செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இங்கு பெண்களுக்கு பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஆண்கள்,பெண்கள் என பலரையும் கலந்து கொள்ளுமாறு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையினர் அழைப்பு விடுக்கின்றனர்.

Leave a comment