இரண்டு கோடி ரூபா செலவில் ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னா முஹம்மதிய்யாவின் அல் மர்கசுல் இஸ்லாமி இஸ்லாமிய நிலையம் பாலமுனையில் திறப்பு

palamunai– பழுளுல்லாஹ் பர்ஹான்

பாலமுனை: பறகஹதெனிய ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னா முஹம்மதிய்யாவின் ஏற்பாட்டில் சவூதி அரேபிய தனவந்தர் ஒருவரின் 2கோடி ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட பாலமுனை அல் மர்கசுல் இஸ்லாமி இஸ்லாமிய நிலைய திறப்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையுடன் ஆரம்பமாகி இடம்பெற்றது.

புறகஹதெனிய ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னா முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவரும் மூத்த சொற்பொழிவாளருமான அஷ்ஷெய்க் அபூபக்கர் சித்தீக் மதனி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக சவூதி அரேபியாவைச் சேர்ந்த அப்துல் அஸீஸ் ஹுமைன் அல் ஹுமைன், பாலமுனை இஸ்லாமிய நிலையத்தை நிர்மாணிப்பதற்கு நிதியுதவி வழங்கிய சவூதி அரேபியாவைச் சேர்ந்த அஷ்ஷெய்க் திஹாம் அப்துர்ரஹ்மான் அத்திஹாம், புறகஹதெனிய ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னா முஹம்மதிய்யாவின் செயலாளர் ஏ.எல்.கலீலுர் ரஹ்மான்,மருதமுனை தாறுல் ஹுதா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் மதனி,பாலமுனை இஸ்லாமிய நிலையத்தின் தலைவர் ஏ.எச்.எம்.அமானுல்லாஹ்,பாலமுனை மஸ்ஜிதுல் அம்மார் பள்ளிவாயலின் பிரதம பேஷ்இமாமும் அம்மார் குர்ஆன் மதரசாவின் அதிபருமான அஷ்ஷெய்க் எம்.சி.எம்.அஸ்ஹர் மின்ஹாஜி, அம்மார் குர்ஆன் மதரசாவின் விரிவுரையாளர் அல்ஹாபிழ் றிபாஸ்,இஸ்லாமிய நிலைய உறுப்பினர்கள்,பெருந்திரளான பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அம்மார் ஜும்மாப் பள்ளிவாசல்,மூன்று கடைகள் கொண்ட கடைத்தொகுதி,அம்மார் குர்ஆன் மதரசா என்பவற்றைக் கொண்டு அமையப் பெற்றுள்ள இந்த இஸ்லாமிய நிலைய திறப்பு விழாவில் பகலுணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment