மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பு

???????????????????????????????– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை  மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் மட்டக்களப்பு  மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை திரு.பொன்னையா ஜோஸப், மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு தலைவர் மாமாங்கராஜா,மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த

தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள்,கிறிஸ்தவ மதப் பெரியார்கள்,மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு  மறைமாவட்ட ஆயரும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் போசகருமாகிய அருட்தந்தை திரு.பொன்னையா ஜோஸப்,

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுத் தலைவர்கள், மட்டக்களப்புக்கு வருகை தராதது பெரும் கவலையளிக்கின்றது.

பொதுநலவாய மாநாட்டுக்கு வருகை தரும் பொதுநலவாய மாநாட்டு தலைவர்கள் மட்டக்களப்புக்கு 13ஆம் திகதி வருகை தரவுள்ளார்கள் எனவும் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு எமது சிவில் சமூக அமைப்புக்கு வேண்டுகோள்விடப்பட்டது.

அந்தவகையில் மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ள அந்த தலைவர்களை வரவேற்பதற்காக நாம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் இங்குள்ள அதிகாரிகள், விமானப்படை அதிகாரி ஆகியோருடன் இணைந்து ஏற்பாடுகளை மேற் கொண்டோம்.

தலைவர்கள் தங்குவதற்கான ஹோட்டல் வசதி, அவர்களுக்கான மட்டக்களப்பின் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் அவர்களை வரவேற்பதற்கான கலாசார நிகழ்வுகள், அவர்கள் சுற்றுலா சென்று மட்டக்களப்பை பார்வையிடுதவற்கான ஏற்பாடுகள் என விரிவான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டன.

ஆனால் கடந்த 12ஆம் திகதி மாலை அவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தரமாட்டார்கள் எனும் செய்தியை கேள்வியுற்று கவலையடைந்தோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

P1150283[1]

???????????????????????????????

Published by

Leave a comment