காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு ‘தயட்ட செவண’ தேசிய மரநடுகை விழா சுப நேரம் காலை 10.03மணிக்கு காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொலிஸ் நிலைய சிறு குற்றத் தடுப்புப்
பிரிவு பொறுப்பதிகாரி ரணசிங்க உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள்,மோட்டார் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் 6இலட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Leave a comment