Category: Your Kattankudy
-
புதுப் பொலிவுடன் காட்சியளிக்கப் போகும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபம்
-டீஎப்.கன்சுல்- காத்தான்குடி:காத்தான்குடிக்கு என்றும் ஒரு தனி அழகினை கொடுத்துக் கொண்டிருப்பவைதான் ஹிஸ்புல்லாஹ் மண்டபம் இந்த ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தினை பாடசாலைகள், மதரசாக்கள், கல்வி நிறுவனங்கள், என அதிகமான பொது அமைப்புகள் தங்களின் நிகழ்வுகளை, விழாக்களை நடாத்த பயன்படுத்தி வருகின்றன.
-
சிட்டிகெம்பஸ் திறப்பு விழா நாளை காத்தான்குடியில்
-டீன் பைரூஸ்- காத்தான்குடி: காத்தான்குடியில் சிறப்புடன் இயங்கி வரும் அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லுாரி இன் சமூக சேவையின் மற்றுமொரு வளர்ச்சிக் கட்டமாக பல்வேறுபட்ட பாடதிட்டங்களை அடிப்படையாக கொண்டு சகலரும் கற்கும் வகையில் திறக்கப்படவுள்ளது CITY CAMPUS. வரலாற்று சிறப்புமிக்க சிட்டி கெம்பஸ் திறப்பு விழா (10.12.2013 செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணிக்கு காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லுாரி வளாகத்தினில் இடம்பெற உள்ளது.
-
மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்பு தொடர்பில் புதிய ஒப்பந்தம்
கொழும்பு: மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்கள் தொடர்பான ஒப்பந்தத்தை தயாரிப்பது தொடர்பில் புதிய இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
-
காத்தான்குடி அல்-குர்ஆன் மதரஸாக்கள் அபிவிருத்தி சபையின் இறுதிப் பரீட்சை 2013
– டீன் பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி அல்-குர்ஆன் மதரஸாக்கள் அபிவிருத்தி சபையினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வரும் அல்-குர்ஆன் இறுதிப் பரீட்சையின் மூன்றாம் நாள் (09.12.2013 ஞாயிற்றுக்கிழமை) இன்று புதிய காத்தான்குடி 06 நுாறாணிய ஜம்ஆ பள்ளிவாயலில் நடை பெற்றது.
-
நெல்சன் மன்டேலா நினைவாக இலங்கையில் இரு நாள் துக்க தினம்!
கொழும்பு: தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மன்டேலாவின் மறைவையொட்டி நாளை 10 ஆம் திகதியும் நாளை மறுதினம் 11 ஆம் திகதியும் இலங்கையில் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
-
நாளை ஆரம்பமாகும் கல்வி பொதுத்தராதர சாதாரணப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சிறந்த பெறுபேருகளை பெற்று மாவட்ட்டதுக்கு பெருமை சேர்க்க தமது ஆசிகளை தெரிவிக்கிறேன்- அமைச்சர் றிஷாத்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: நாளை ஆரம்பமாகும் கல்வி பொதுத்தராதர சாதாரணப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சிறந்த பெறுபேருகளை பெற்று மாவட்ட்டதுக்கு பெருமை சேர்க்க தமது ஆசிகளை தெரிவிப்பதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.
-
மண்டேலாவின் இறுதிக் கிரியைகளில் ஜனாதிபதி பங்கேற்பார்
கொழும்பு: தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் கறுப்பின ஒதுக்கலுக்கு எதிரான போராட்ட வீரருமான நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியைகளில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று ஜனாதிபதியின் பேச்சாளர் மொகான் சமரநாயக்கா நேற்று தெரிவித்தார்.
-
இலங்கையில் கிருமிநாசினி பாவனை 8 மடங்கு அதிகம்
நீரிழிவு, புற்றுநோய், சிறுநீரகநோய் அதிகரிப்புக்கு கிருமிநாசினி பாவனையே காரணம் கொழும்பு: ஆசியப் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் கிருமி நாசினிப் பாவனை எட்டு மடங்கு அதிகமாகக் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக் காட்டியுள்ளது.
-
மிஸ்வாக் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டமும் பல் வைத்திய உண்மைகளும் – தொடர் 11
ஆசிர் How a tooth is attached firmly – பற்கள் எவ்வாறு உறுதியாகவுள்ளன. மனிதனின் முகத்தில் காணப்படும் எலும்புகளில் தாடை எலும்புகள் எனப்படும் ஒரு சோடி எலும்புகள் காணப்படுகின்றன. இவை முறையே மேற்றாடை மற்றும் கீழ்த்தாடை என்புகளாகும். இவ்வென்புகளில் தான் மனிதனின் பற்கள் புதையுண்ட நிலையில் காணப்படுகின்றன. மனிதனின் தாடை எலும்புகள் மேலதிகமாகக் காணப்படும் பற்தாங்கு தாடை எலும்பு (Alveolar bone) எனப்படும் ஒரு வகை எலும்புகளோடு பற்கள் இணைக்கப்பட்டுள்ளன.
-
மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனினால் விளையாட்டு கழகத்திற்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதிதி தலைவரும்,மீள் குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயக மூர்த்தி முரளிதரனின் 2 இரண்டு லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாமாங்கம் பீனிக்ஸ் ஜிம் சென்டருக்கும் சின்ன உப்போடை இளைஞர் விளையாட்டு கழகத்திற்கும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
-
காணாமல் போனோர் சம்மந்தமான விபரங்கள் கையளிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காணாமல் போனோர் சம்மந்தமான தகவல்களைத் திரட்டி ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கும் ஒரு நடவடிக்கை கடந்த இரு வாரங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டுதலுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கினால் மேற்கொள்ளப்பட்டது.
-
11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இளம்பெண்கள் விடுதலை
கெய்ரோ: எகிப்தின் அதிபரான முகமது மோர்சி கடந்த ஜூலை மாதம் பதவியிலிருந்து இறக்கப்பட்டபோது அதனை எதிர்த்து ஏராளமானோர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.