How a tooth is attached firmly – பற்கள் எவ்வாறு உறுதியாகவுள்ளன.
மனிதனின் முகத்தில் காணப்படும் எலும்புகளில் தாடை எலும்புகள் எனப்படும் ஒரு சோடி எலும்புகள் காணப்படுகின்றன. இவை முறையே மேற்றாடை மற்றும் கீழ்த்தாடை என்புகளாகும். இவ்வென்புகளில் தான் மனிதனின் பற்கள் புதையுண்ட நிலையில் காணப்படுகின்றன. மனிதனின் தாடை எலும்புகள் மேலதிகமாகக் காணப்படும் பற்தாங்கு தாடை எலும்பு (Alveolar bone) எனப்படும் ஒரு வகை எலும்புகளோடு பற்கள் இணைக்கப்பட்டுள்ளன. பற்களுக்கும் எலும்பிற்குமிடையிலான இந்த உறுதியான இணைப்பை உருவாக்கும் பாகங்கள் அனைத்தும் மொத்தமாக Periodontium (பற்சுற்றிழையம்) எனப்படும். இதில் உள்ளடக்கப்படும் பாகங்களாவன,
01. பற்சீமெந்து (Cementum)
02. பற்தாங்கு தாடை எலும்பு (Alveolar bone)
03. பற்றுச்சு இணைப்பு நாண் (Periodontal ligaments)
04. பல் ஈறு அல்லது (Gingiva)Cementum
இதன் ஒரு பகுதி அமைப்பு மேலே விபரிக்கப்பட்டுள்ளது அத்துடன் இச்சீமெந்துடன் பல் இணைப்பு நாண்கள் இணைக்கப்பட்டுள்ளதன் காரணமாக இது பல்லைத் தாங்கவும் பயன்படுகின்றது.
Periodontal Ligaments (பல் இணைப்பு நாண்கள்)
இந்த நாண்களே பல்லையும் எலும்பையும் நேரடியாக இணைக்கப் பயன்படுகின்றன. இவை ஒரு முனையில் பல் சீமெந்துடனும் மறு முனையில் பல் தாங்கும் தாடை எலும்புடனும் இணைந்துள்ளன. இவை பல்வேறு தொழில்களைக் கொண்டுள்ளன.
01. பல்லை எலும்புடன் உறுதியாக இணைக்க உதவுகின்றது.
02. இந்த நாண்கள் பல்வேறு குழுக்களாக பல்வேறு திசைகளில் செல்லக் கூடியவாறு அமைந்திருப்பதால் பற்களில் தாக்கும் பல்வேறு வகையான விசைகளையும் அழுத்தங்களையும் தாங்கக் கூடியவையாக இருந்து பற்கள் நலிவடையாது பாதுகாக்கின்றன.
03. இந்த நாண்களில் காணப்படும் நரம்பு இணைப்புக்கள் உணவை மெல்லும் போதும் பற்களைக் கடிக்கும் போதும் அதிக விசை உருவாவதைத் தடுக்கும் பொறிமுறையைக் கொண்டுள்ளன.Tooth Eruption – பல் முளைத்தல்.
மனிதனில் இரண்டு தொகுதிப்பற்கள் காணப்படுகின்றன. அவை பாற்பற்கள் மற்றும் நிரந்தரப் பற்கள். ஒவ்வொரு பற்தொகுதியிலும் வித்தியாசமான அமைப்பையுடைய பற்கள் காணப்படுகின்றன. இப்பற்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் முளைக்காமல் வளர்ச்சிற்கேற்ப மற்றும் உணவுப் பழக்கங்களுக்கு ஏற்ப தேவையான நேரத்தில் முளைக்கின்றன. மேலும் பற்கள் சொற்களை உரிய முறையில் உச்சரிப்பதிலும் பெரும்பங்கு வகிக்கின்றன. இதனால் குழந்தைகள் சரியான முறையில் சொற்களையும் உச்சரிப்பையும் கற்றுக்கொள்ள ஏதுவாக உள்ளது.
பல் முளைத்தல் என்பது முதன் முதலாகப் பற்கள் வாயினுள் தோன்ற ஆரம்பிப்பதாகும். இது குழந்தை பிறந்து 6வது மாதம் முதல் ஆரம்பிக்கும். இவ்வாறு இருந்த போதிலும் பற்கள் கருக்கட்டல் நடைபெற்று 6வது வாரத்தில் இருந்தே படிப்படியாக உருவாக ஆரம்பிக்கின்றன. மனிதனில் காணப்படும் பாற்பற்கள A,B,C,D,E எனப்படும் ஆங்கில எழுத்துக்களாலும் நிரந்தரப் பற்கள் 1 தொடக்கம் 8 வரையான இலக்கங்களாலும் குறிக்கப்படுகின்றன.பாற்பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் காலப்பகுதி.
பொதுவாக கீழ்த்தாடைப்பற்கள் மேல்த்தாடைப் பற்களை விட விரைவாக முளைக்க ஆரம்பிக்கின்றன.கீழ்த்தாடையிலுள்ள பற்கள்
கீழ்த்தாடை மேல்த்தாடை(மாதங்கள்)
01. யு 6-8 6-8
02. டீ 7-8 8-10
03. ஊ 16-20 16-20
04. னு 12-16 12-16
05. நு 20-30 20-30பற்கள் விழ ஆரம்பிக்கும் கால எல்லை
கீழ்த்தாடை மேல்த்தாடை
யு 6 7
டீ 7 8
ஊ 10 11
னு 9 9
நு 10 12நிரந்தரப்பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் காலப்பகுதி
கீழ்த்தாடை மேல்த்தாடை(வருடங்கள்)
1. 6-7 7-8
2. 7-8 8-9
3. 9-10 11-12
4. 10-12 10-11
5. 11-12 10-12
6. 6-7 6-7
7. 12-13 12-13
8. 17-21 17-21இந்தக் காலப்பகுதிகளில் சிலரில் ஒருசில வேறுபாடுகள் காணப்படலாம். ஆனால் அவை அனைத்தும் வேறு நோய்களின் அறிகுறிகள் அல்ல. இருந்தாலும் பற்கள் தாமதமாக முளைப்பதற்கான சில காரணங்கள்.
01. மரபணுக்களுடன் சம்பந்தப்பட்ட Down syndrome and Turner syndrome நோய்களையுடைய குழந்தைகளில்
02. போசாக்கு குறைபாடுடன் வளரும் குழந்தைகளில்
03. தைரொய்ட், பராதைரொய்ட் கபச் சுரப்புடன் சம்பந்தப்பட்ட நோய்களுள்ள சிறுவர்களில்.
04. மேலும் பரம்பரையியல் தொடர்பான முரசு நோய் உள்ளவர்களிலும் பற்கள் தாமதமாக முளைக்கும்.தொடரும்….
தொகுப்பு – உம்மு ஷைமா அஸ்ஸாலிஹாத்
Published by

Leave a comment