-டீஎப்.கன்சுல்-
காத்தான்குடி:காத்தான்குடிக்கு என்றும் ஒரு தனி அழகினை கொடுத்துக் கொண்டிருப்பவைதான் ஹிஸ்புல்லாஹ் மண்டபம் இந்த ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தினை பாடசாலைகள், மதரசாக்கள், கல்வி நிறுவனங்கள், என அதிகமான பொது அமைப்புகள் தங்களின் நிகழ்வுகளை, விழாக்களை நடாத்த பயன்படுத்தி வருகின்றன.
காத்தான்குடிக்கு பெருமை தேடி தந்து கொண்டிருக்கும் ஹிஸ்புழ்ழா மண்டபத்தினில் உள்ளுார் நிகழ்வுகள் மாத்திரமல்ல வெளியுர்(கலைஞர்களின்) நிகழ்வுகளும் அடிக்கடி இடம் பெற்று வருகின்றன.
தற்போது மண்டபத்தினில் பல்வேறு பட்ட சிறிய தேவைப்பாடுகள் இருப்பதனை கௌரவ பிரதி அமைச்சர் MLAM ஹிஸ்புல்லாஹ் MA MP இன் கவனத்திற்கு கொண்டு வந்ததினை அடுத்து மேற்படி ஹிஸ்புல்லாஹ் மண்டபம் இன்ஷா அல்லாஹ் இன்னும் ஓரிரு மாதங்களில் புதுப் பொலிவுடன் காட்சியழிக்கும் என கௌரவ பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார.
விசேடமாக மண்டபத்தின் உள்பகுதிற்கான வேளைகள் இடம்பெற இருப்பதுடன் மண்டபத்தின் முன்னால் ஈத்த மரங்கள், இளைப்பாறும் இருக்கைகள், மின்விளக்குகள் என பல விடயங்கள் அமையப் பெற இருப்பதுடன் விசேடமாக வலீமா மண்டபம் ஒன்றும் அதி நவீனமாக அமைக்கப்பட இருப்பதாகவும் பிரதி அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் MA MP தெரிவித்துள்ளார்.
Published by


Leave a comment