நெல்சன் மன்டேலா நினைவாக இலங்கையில் இரு நாள் துக்க தினம்!

Sri-Lanka-goverment-logo2[1]கொழும்பு: தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மன்டேலாவின் மறைவையொட்டி நாளை 10 ஆம் திகதியும்  நாளை மறுதினம் 11 ஆம் திகதியும்  இலங்கையில் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
 
குறித்த இரண்டு தினங்களிலும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு இலங்கை பிரஜைகளிடம் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சின் செயலாளர் பீ.பி.அபேகோன் கூறியுள்ளார்.

Published by

Leave a comment