Category: Your Kattankudy
-
அல்ஆமினா பாலர் பாடசாலை கலை விழா
– அபூ ஸலாமா திருகோணமலை: 2013ஆம் ஆண்டுக்கான கல்வி நெறியைப் பூர்த்தி செய்த திருகோணமலை ஜமாலியா அல்ஆமினா பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பரிசளிப்பு விழாவும் கடந்த சனிக்கிழமை 07.12.2013ஆம் திகதி சனிக்கிழமை தி/தி/ஜமாலியா முஸ்லிம் மஹா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க காத்தான்குடி CITY CAMPUS தொடர்பான புகைப்படங்கள்.
-டீன் பைரூஸ்- ஊடக அனுசரனை WWW.YOURKATTANKUDY.COM
-
‘நாட்டுப்பற்று-சமூகப்பற்று’த் தொடர் டுபாயில் இன்று ஆரம்பம்!
– MJ டுபாய்: இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கட் தொடர் இன்று 11-12-2013 புதன்கிழமை டுபாய் நகரில் ஆரம்பமாகிறது. பாகிஸ்தான்-இலங்கை அணிகளுக்கிடையிலான 2009 ஆரம்பத் தொடரில் பாகிஸ்தானில் ஏற்பட்ட
-
மைசூர் ‘மகாராஜா’ காலமானார்
மைசூர்: மைசூர் ராஜவம்சத்தின் கடைசி வாரிசான ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் தமது 60 ஆவது வயதில் மாரடைப்பால் இன்று காலமானார்.
-
தொழிநுட்ப உத்தியோகத்தர் அப்துல் ஹலீம் ஜப்பான் பயணம்
AH காதான்குடி: காதான்குடி நகரசபையில் தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமைபுரியும் அப்துல் ஹலீம் ஜப்பானில் இயங்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்பான UNEP இன் அழைப்பினை ஏற்று 09/12/2013 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். இவர் அங்கு நடைபெரும் திண்மக்கழிவு முகாமைத்துவம் சம்மந்தமான பயிற்சி பட்டறையில் காத்தான்குடி நகரசபை சார்பாக கலந்துகொள்வதுடன் காத்தான்குடியைப் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றிணையும் இப்பயிற்சி பட்டறையில் சமர்பிக்கவுள்ளார்.
-
வடமாகாண சபை அமர்வில் றிப்கான் பதியுதீன்
அபூ அஸ்ஜத் யாழ்ப்பாணம்: வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு எதிராக கொண்டுவரப்பட இருந்த பிரேரணை ஒன்று தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் இன்று இடம் பெற்ற வட மாகாண சபையின் அமர்வின் போது கருத்துக்களை முன் வைத்துள்ளார். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கேட்போர் கூடத்தில் சபை முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் இன்று இந்த அமர்வு இடம் பெற்றுள்ளது.
-
செவ்வாய்க் கிரகத்தில் வரண்ட ஏரி கண்டுபிடிப்பு
நியுயோர்க்: ‘மைக்ரோப்’கள் எனப்படும் நுண்ணுயிர்கள் ஒருவேளை செவ்வாய்க் கிரகத்தில் வாழ்ந்திருந்தால், அவைகள் வாழ்வதற்கு வேண்டிய சூழ்நிலையைத் தந்திருக்கக்கூடிய ஒரு வரண்ட ஏரியை , செவ்வாய்க் கிரகத்தில் தற்போது ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் நாசா நிறுவனத்தின் க்யூரியாசிட்டி உலாவி வாகனம் அனுப்பிய புகைப்படங்களும், தகவல்களும் காட்டுகின்றன.
-
நானாட்டான் பி.செயலகத்தாக்குதல்- இன ஐக்கியத்தைச் சீர்குழைக்கும் செயல்
– மன்னார் அம்பி மன்னார்: மன்னார் மாவட்டத்தில் அரச இயந்திரத்தின் செயற்பாட்டை முழுமையாக ஸ்தம்பிதமடையச் செய்ததுடன், இப்பிரதேசத்தில் காணப்பட்ட இன ஜக்கியத்தை சீர்குலைக்கும் ஒரு செயலாக நானாட்டான் பிரதேச செயலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தாம் கருதுவதாகவும், இதற்கு எவரும் பரிந்து பேசுவது முறையல்ல
-
‘சிட் டி கெம்பஸ்’ காத்தான்குடியில் திறந்துவைக்கப்பட்டது!
– பழுலுல்லாஹ் பர்ஹான காத்தான்குடி: அல்-மனார் நிறுவனத்தின் சமூக சேவையின் மற்றுமொறு படிக்கல்லாக மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் கடற்கரைக்கு அருகாமையில் அமையப்பெற்றுள்ள அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியில் தனி ஒரு பிரிவாக வாழ்க்கைக்கு தொழில்
-
இறுதிப் போரில் இராணுவத்திற்கு அமெரிக்கா பயிற்சி-அதிர்ச்சி!
– SHM ரோம்: இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவத்தினருடன் அமெரிக்க ராணுவத்தினர் தினமும் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர் என்று திடுக்கிடும் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கலாபூஷணம் விருது வழங்கல் விழா இம்மாதம் 15ஆம் திகதி
கொழும்பு: கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 29 ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாபூஷணம் விருது வழங்கல் விழா எதிர்வரும் 15ஆம் திகதி மு.ப. 10.00 மணிக்கு கொழும்பு-07, றோயல் கல்லூரி நவரங்கஹல மண்டபத்தில் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரீ.பீ. ஏக்கநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
-
சர்வதேச மனித உரிமைகள் தினம், டிசம்பர் 10
டிசம்பர் பத்தாம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இவ்வாண்டின் கருப்பொருளாக ‘உங்களின் உரிமைக்காக செயற்படுவோம்’ Working for your rights’