மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதிதி தலைவரும்,மீள் குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயக மூர்த்தி முரளிதரனின் 2 இரண்டு லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாமாங்கம் பீனிக்ஸ் ஜிம் சென்டருக்கும் சின்ன உப்போடை இளைஞர் விளையாட்டு கழகத்திற்கும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அன்பளிப்பு செய்யப்பட்ட 2 இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு 07-12-2013 நேற்று சனிக்கிழமை மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கிரிதரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனினால் மாமாங்கம் பீனிக்ஸ் ஜிம் சென்டருக்கு அதன் தலைவர் ரஜீகரனிடம் ஒரு 1 இலட்சம் ரூபா பெறுமதியான (ஜிம்)உடற்பயிற்சி உபகரணங்களும் சின்ன உப்போடை இளைஞர் விளையாட்டு கழகத்திற்கு அதன் தலைவர் றொனியிடம் 1 இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன் , மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் ஊடக செயலாளர் ஜீவா உட்பட மீள்குடியேற்ற பிரதியமைச்சரினின் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,இளைஞர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Published by

Leave a comment