சிட்டிகெம்பஸ் திறப்பு விழா நாளை காத்தான்குடியில்

-டீன் பைரூஸ்-

OLYMPUS DIGITAL CAMERAகாத்தான்குடி: காத்தான்குடியில் சிறப்புடன் இயங்கி வரும் அல்-மனார்  இஸ்லாமிய அறிவியற் கல்லுாரி இன் சமூக சேவையின் மற்றுமொரு வளர்ச்சிக் கட்டமாக பல்வேறுபட்ட பாடதிட்டங்களை அடிப்படையாக கொண்டு சகலரும் கற்கும் வகையில் திறக்கப்படவுள்ளது CITY CAMPUS. வரலாற்று சிறப்புமிக்க சிட்டி கெம்பஸ் திறப்பு விழா (10.12.2013 செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணிக்கு காத்தான்குடி அல்-மனார்  இஸ்லாமிய அறிவியற் கல்லுாரி வளாகத்தினில் இடம்பெற உள்ளது.

அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லுாரியின் செயலாளர் அஷ்ஷெய்ஹ் ALM மும்தாஸ்(மதனி) BA தலைமையில் நடைபெற உள்ள இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்….

சவுதி அரேபியாவை சேர்ந்த அஷ்ஷெய்ஹ் அபு அப்துல் அஸீஸ் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்றஸீத் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சா் கௌரவ அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் MA.MP அவா்களும் சிறப்பு அதியாக கௌரவ அல்ஹாஜ் MFM.சிப்லி Eng (கிழக்கு மாகாணசபை உறுப்பனர்) மற்றும் கௌரவ அல்ஹாஜ் SHM அஸ்பர் JP அவா்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

சிறப்பு மிக்க இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர்  நிர்வாகத்தினர்.OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment