கெய்ரோ: எகிப்தின் அதிபரான முகமது மோர்சி கடந்த ஜூலை மாதம் பதவியிலிருந்து இறக்கப்பட்டபோது அதனை எதிர்த்து ஏராளமானோர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்த கலவரங்களில் நூற்றுககணக்கானோர் கொல்லப்பட்டனர்.
சென்ற மாதமும் பெண்கள் குழு ஒன்று மோர்சிக்கு ஆதரவாக அதிகாலைப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
7 மணிப் போராட்டம் என்று அழைக்கப்பட்ட இந்தப் போராட்டம் அமைதியாக நடைபெற்றதாகவும், அதுவே அந்தக் குழுவினரின் முதல் போராட்டம் என்றும் கூறப்பட்டது.
ஆயினும் அவர்கள் தீவிரவாதிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் போக்குவரத்தைத் தடைப்படுத்துவதாகவும், நாசவேலைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேர் இளம்பெண்கள். இவர்களுக்கு மூன்று மாத பரோலும், மற்றவர்களுக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை மனித உரிமைக் குழுக்கள் விமர்சித்தனர். இது பைத்தியக்காரத்தனமான முடிவு என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று கெய்ரோவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டனர்.
அலெக்சாண்டிரியாவில் உள்ள நீதிமன்றத்தின் சிறப்புக் கூண்டில் சிறைக் கைதிகளுக்கான வெள்ளை ஆடையிலும், கைகளில் சிகப்பு ரோஜாக்களுடனும் 14 பெண்களும் ஆஜராகினர்.
அவர்கள் தங்கள் உள்ளங்கைகளில் சுதந்திரம் என்று எழுதி வைத்திருந்தனர். நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் ஏரானமான பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.Ls
Published by


Leave a comment