கொழும்பு: தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் கறுப்பின ஒதுக்கலுக்கு எதிரான போராட்ட வீரருமான நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியைகளில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று ஜனாதிபதியின் பேச்சாளர் மொகான் சமரநாயக்கா நேற்று தெரிவித்தார்.
தனது 95 வது வயதில் கடந்த 5 ஆம் திகதி காலமான மறைந்த தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 14 ஆம் திகதி அந்நாட்டில் நடைபெறவிருக்கின்றது. அன்னாரின் இறுதிக் கிரியைகளில் பங்குபற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதன் பின்னர் கென்ய நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் எனவும் ஜனாதிபதியின் பேச்சாளர் கூறினார்.
கென்யாவுக்கு விஜயம் செய்யும் இலங்கை ஜனாதிபதி அவர்கள் அந்நாட்டின் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்குபற்றுவார் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட செயற்பாட்டுக் குழுக் கூட்டம் கென்யாவில் நடைபெறவிருக்கின்றது. இக்கூட்டம் பொதுநலவாய அமைப்பின் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய அமைப்பு அடுத்துவரும் இரு வருடங்களிலும் முன்னெடுக் கவிருக்கும் நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் குறித்து இங்கு கலந்துரையாடப்படும் என்றும் அவர் தெரி வித்துள்ளார்.
பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட செயற்பாட்டுக் குழுவில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.tk
Published by
![mandela[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/mandela1.jpg?w=107&h=150)
Leave a comment