Category: Your Kattankudy
-
என்புருக்கி நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் ஜனாதிபதி
கொழும்பு: கம்புறுபிட்டியவில் என்புருக்கி நோயினால் செளபாக்கியா என்ற 9 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குழந்தைக்குத் தேவையான சிகிச்சைகளை உடனடியாக வழங்குமாறு பணித்ததுடன் அலரிமாளிகைக்கும் அழைத்து குழந்தையுடன் அன்பாக உரையாடிய போது எடுத்த படம்.
-
சட்டத்தரணி அப்துல் ஜவாத் சவால் கிண்ணம்-2014
– KFL காத்தான்குடி: எதிர்வரும் வெள்ளிகிக்ழமை (30-05-2014) மாலை 4 மணிக்கு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி கால்பந்தாட்ட லீக் (KFL) இனால் நடாத்தப்படும் 12 அணிகள் கலந்து கொள்ளும் ‘நொக்அவுட்’ முறையிலான சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வும் மற்றும் முதலாவது போட்டியும் நடைபெறவுள்ளது.
-
தாயும் மகளும் சிறுமிகள்: இலங்கையில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகம்
பண்டாரவளை: பண்டாரவளை பிரதேசத்தில் 13 மற்றும் 15 வயதான சகோதரிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மைத்துனரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 22 வயதான சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
-
விமானத்தின் பாகங்கள் இலங்கை அளுத்கம கடலில் கண்டுபிடிப்பு!
கொழும்பு: விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் சிதைவுகள் சில இலங்கை அளுத்கம, மொரகல பகுதி மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிதைவுகள் மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
-
முஸ்லிம் தாய் ஹிஜாப் உடை அணிந்துவர கொழும்பு பாடசாலை தடை
கொழும்பு: கொழும்பு மாவட்டத்தில் உள்ள முக்கிய பாடசாலைகளில் ஒன்றான ராஜகிரிய ஜனாதிபதி மகளிர் வித்தியாலயத்திற்குள் முஸ்லிம் தாய்மார் பாரம்பரிய ஹிஜாப் உடையணிந்து பிரவேசிப்பதை தடைசெய்வதற்கு பாடசாலையின் அதிபர் தீர்மானித்துள்ளார்.
-
1200 வருடங்களுக்கு முன்னரும் கணனி டேப்லட் இருந்திருக்கலாம்!
– S-90 இஸ்தான்புல்: துருக்கியில் 1200 ஆண்டுகளுக்கு முன்பான பழமையான டேப்லட் கணினி இருந்தது தெரிய வந்துள்ளது. அதை தொல் பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.துருக்கியை சேர்ந்த தொல் பொருள் ஆய்வாளர்கள் 1200 ஆண்டுகளுக்கு முந்தய மரத்தாலான ஒரு பொருளை கண்டறிந்துள்ளனர்.
-
‘நரேந்திர மோடியும் நம்மவர்தான்’-இஸ்ரேல்
– AF-77 டெல்லி: இந்தியப் பிரதமர் மோடியை, வெளிப்படையானவர், தைரியமானவர், எதையும் துணிச்சலாக செய்பவர்.. அவரும் இஸ்ரேலியர் போலத்தான்.. இப்படிப் பாராட்டித் தள்ளியுள்ளனர் இஸ்ரேலியர்கள். அதுவும் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்.
-
திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடை கேட்டு முஸ்லிம் அமைப்பு வழக்கு!
– S-90 சென்னை: திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம் அமைப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது. திருமணம் என்னும் நிக்காஹ் என்ற தலைப்பும், அது எதைப் பற்றிய கதை என்ற தகவலும் வெளியானதிலிருந்தே, அந்தப் படத்துக்கு ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆட்சேபணை தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
-
‘ஒருபோதும் சிந்தியிராத கண்ணீரில் ஒரு துளியை விட்டுச் செல்லுங்கள்’ கொல்லப்பட்ட மாணவியின் இறுதி முகநூல் வரிகள்…
கொழும்பு: கொழும்பு பல்கலைக் கழக மாணவி டிமாசா கயனகி திமான இராணுவச்சிப்பாயால் படுகொலை செய்யப்படுவதற்கு முன் தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவு செய்திருந்த சிங்களக் கவிதையின் தமிழ் வடிவம் இது. இதனை முக நூல் நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள்… மனதை மிகவும் பாதித்திருந்த கவிதை இது… அதனை நாமும் பகிர்ந்து கொள்கிறோம்…
-
பீபா 2014 உலகக் கிண்ணம்: கமெரா பொருத்தப்பட்ட புதிய பந்து அறிமுகம்!
பிரேசிலியா: பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள உலக கிண்ண உதைபந்தாட்ட போட் டித் தொடரில் பயன்படுத்தப்பட உள்ள அதிகாரப்பூர்வ பந்துக்கு ‘பிரசூகா’ என்று பெயரிட்டுள்ளனர். பிரேசில் நாட்டு மக்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் இந்த பெயரை கோடிக்கணக்கான ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்துள்ளனர்.
-
15 வயது பூர்த்தியான மாணவர்களுக்கு அடையாள அட்டை: புதிய முறை அறிமுகம்
கொழும்பு: பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் நான்கு இலட்சம் பாடசாலை மாணவர்களில் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் மாணவர்களின் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களே இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜி. ஏ. ஆர். தேவப்பிரிய தெரிவித்தார்.
-
வாகனங்களில் ‘ஹோர்ன்’களின்ஒலியை எழுப்புவதில் புதிய கட்டுப்பாடு
கொழும்பு: வாகன ஹோர்ன்களின் மூலம் எழுப்பப்படும் ஒலியை கட்டுப் படுத்த பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். ஹொர்ன்களை பயன்படுத்துவது, விபத்துகளை தவிர்ப்பதற்காகவும், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும் போது தேவையான இடத்தை பெற்றுக் கொள்வதற்காகவுமே பயன்படுத்த வேண்டும்.