Category: Your Kattankudy
-
பெண் பொலிஸாருக்கென புதிய சீருடை அறிமுகம்
கொழும்பு: பெண் பொலிஸாருக்கென புதிய சீருடையை அறிமுகப் படுத்த பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில், பொலிஸ்மா அதிபர் முன்வைத்த பரிந்துரைக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியது.
-
அகதி அந்தஸ்து கோருவதற்காக ஆபிரிக்கர்கள் ஐரோப்பாவிற்குள் குதிக்கும் படத்தொகுப்பு!
– MJ லண்டன்: ஆபிரிக்க நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்சம்பவங்களைக் கருத்திற்கொண்டு, பெரும்பாலான ஆபிரிக்க நாட்டவர்கள் தரை வழியாகவும், கடல் மார்க்கமாகவும் ஐரோப்பா நாடுகளுக்கு அத்துமீறி நுழைந்து தங்களது புகழிடக்கோரிக்கையை முன்வைப்பதற்காக, தங்களது உயிர்களைப் பணயம் வைக்கும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றன.
-
இங்கிலாந்திலிருந்து ஸ்கொட்லாந்து பிரிவதற்கான ‘கவுண்டவுண்’ இன்றிலிருந்து ஆரம்பமாகிறது!
– AF-70 லண்டன்: இங்கிலாந்து நாட்டுடன் 307 ஆண்டுகாலமாக இருந்து வரும் ஸ்கொட்லாந்து, தனிநாடாகப் பிரிவதற்கான வாக்கெடுப்புக்குரிய அதிகாரப்பூர்வ ‘கவுன்ட்டவுன்’ இன்று தொடங்கியுள்ளது. கி.பி. 1707-ம் ஆண்டு இங்கிலாந்துடன் அண்டை நாடான ஸ்காட்லாந்து இணைந்தது.
-
சமுக நலனுக்கான அமைப்பின் (MSW) 3வது இரத்ததான முகாம்
– MSW காத்தான்குடி: எமது சமுக நலனுக்கான அமைப்பினால் (Movement For Social Wellness) இரத்ததானம் வழங்கும் நிகழ்வொன்று எதிர்வரும் 01/06/2014 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிதொடக்கம் மதியம் 1.00 மணிவரை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்யாலயத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கின்றது.
-
கஃபதுல்லாஹ் கழுவப்படும்போது ஏற்பட்ட கைலப்பில் நால்வர் காயம்!
– MJ மக்கா: நேற்று வியாழன் இரவு, அல்லாஹ்வின் ஆலயமான கஃபத்துல்லாஹ்வை சவூதி அரேபிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும், மஸ்ஜிதுல் ஹரம் ஆலயத்தின் இமாம்கள் மற்றும் அதன் சேவகர்கள் ஆகியோரால் ஸம்ஸம் நீர், பன்னீர் மற்றம் நறுமனங்களைக் கொண்டு கஃபதுல்லாஹ் கழுவப்பட்டது.
-
கடத்தப்பட்ட 300 மாணவிகளில் மேலும் 4 பேர் தப்பினர்!
– S-90 அபுஜா: நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளில் மேலும் நான்கு பேர் தப்பி வந்துள்ளதாக அந்நாட்டு கல்வி ஆணையாளர் தெரிவித்துள்ளார். வடக்கு நைஜீரியாவை இஸ்லாமியர்களுக்கான தனி நாடாக அறிவிக்கக்கோரி போகோஹாரம் தீவிரவாதிகள் நீண்ட நாட்களாகவே போராடி வருகின்றனர்.
-
மாதக் கணக்கில் தேடும் இடத்தில் மாயமான மலேசிய விமானம் விழுந்திருக்காது: அவுஸ்திரேலியா
– S-90 சிட்னி: இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் இடத்தில் மாயமான மலேசிய விமானம் இல்லை என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்ச். 370 மாயமானது.
-
சாதி வெறிக்காக பலாத்காரம் செய்து, கொன்று மரத்தில் தொங்க விடப்பட்ட சிறுமிகள்!
– SHM லக்னோ: இந்தியாவில் உ.பியில் உள்ள ஒரு கிராமத்தில் சாதி வெறி காரணமாக இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து மாமரத்தில் தொங்க விட்டுள்ளனர் சாதி வெறியர்கள். இந்த கொடும் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஸ்போட்டில் கிறுக்கித்தள்ளிய சிறுவன்: நாடு திரும்பமுடியாமல் அவதியில் தந்தை
சங்கய்: சீனாவை சேர்ந்த நபர் ஒருவரது மகன் அவரின் கடவுச்சீட்டில் படங்கள் வரைந்ததால் நாடு திரும்ப முடியாமல் அந்நபர் தவித்து வருகிறார். சீன நாட்டை சேர்ந்த தந்தையும், அவரது நான்கு வயது மகனும் தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தனர்.
-
ஆசிய கிரிக்கெட் திறமைகளை தெருக்களில் தேடும் இங்கிலாந்து
லண்டன்: இங்கிலாந்தில் பிரிட்டிஷ்-ஆசிய சமூகத்தவர்களிடம் காணப்படும் கிரிக்கெட் ஆர்வத்தையும் திறமைகளையும் பயன்படுத்தி, அந்த சமூகங்களிலிருந்து நாட்டுக்கான முதற்தர கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் முயற்சியில் இங்கிலாந்து- வேல்ஸ் கிரிக்கெட் சபை இறங்கியுள்ளது.
-
ஸ்கைப் தளத்தில் சமகாலத்தில் உரைபெயர்க்கும் தொழில்நுட்பம்
நியுயோர்க்: சமகாலத்தில் உரையை மொழி பெயர்க்கும் புதிய மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை மைக்ரோசொப்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்கைப் இணையதள சேவையின் மூலம் பெறப்படும் வீடியோ அழைப்பில் வேற்று மொழிகள் பேசுவோர் இடையூறு இன்றி சமகாலத்தில் உரையாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.