1200 வருடங்களுக்கு முன்னரும் கணனி டேப்லட் இருந்திருக்கலாம்!

ancient-tabet-250514[1]– S-90

இஸ்தான்புல்: துருக்கியில் 1200 ஆண்டுகளுக்கு முன்பான பழமையான டேப்லட் கணினி இருந்தது தெரிய வந்துள்ளது. அதை தொல் பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.துருக்கியை சேர்ந்த தொல் பொருள் ஆய்வாளர்கள் 1200 ஆண்டுகளுக்கு முந்தய மரத்தாலான ஒரு பொருளை கண்டறிந்துள்ளனர்.

இது டேப்லட் கம்யூட்டருக்கு இணையான பழைய பொருளாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கப்பல் சிதைவில் கண்டுபிடிப்பு:

துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் நகர் அருகே உள்ள யேனிகாபி பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட பழமையான 37 கப்பல் சிதைவுகளில் ஒன்றில் இருந்து இந்த பொருள் கண்டறியப்பட்டுள்ளது.

பழமையான வணிகப்பகுதி:

நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தியோடோசியஸ் துறைமுகம், பைசண்டைன் பேரரசர் ஆட்சிக் காலத்தில் நகரின் முக்கியமான வணிகத் துறைமுகமாகவும் விளங்கி வந்துள்ளது.

மரத்தாலான டேபிளட்:

இந்த பகுதியில் இருந்து தற்போது கண்டறியப்பட்ட இந்த மரத்திலான பொருளானது, மரச்சட்டங்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அளவு ‘7 அங்குலங்கள் கொண்டதாகவும் நவீன டேபிளட் கம்யூட்டர் போன்று காணப்படுகிறது.

கப்பல் கெப்டனுக்கானது:

ஆனால் இது மிகவும் வலுவுள்ளதாக காணப்படுகிறது. உத்தேசமாக இதை கப்பல் கேப்டன் பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.கிரேக்க மொழி எழுத்துகள்:செவ்வக வடிவில் இதன் மரச்சட்டம் அதாவது பெனல் அமைந்துள்ளது. மெழுகு பொருட்களும் அதில் பூசப்பட்டுள்ளது. இதன் பெனல்களின் கிரேக்க மொழியில் எழுதவும் பட்டிருக்கிறது.

ancient-tabet-250514[1]

Published by

Leave a comment