காத்தான்குடி: எதிர்வரும் வெள்ளிகிக்ழமை (30-05-2014) மாலை 4 மணிக்கு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி கால்பந்தாட்ட லீக் (KFL) இனால் நடாத்தப்படும் 12 அணிகள் கலந்து கொள்ளும் ‘நொக்அவுட்’ முறையிலான சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வும் மற்றும் முதலாவது போட்டியும் நடைபெறவுள்ளது.
இப்போட்டிகள் அனைத்தும் பிரதி வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருக்கின்றன.
சுற்றுப்போட்டிக்கான சகல நடுவர் ஏற்பாடுகளையும் காத்தான்குடி உதைப்பந்தாட்ட நடுவர் சம்மேளனம் மேற்கொள்ளும்.
இச்சுற்றுப்போட்டியைக் காண அனைவரையும் அன்புடன் அழைக்கிறது காத்தான்குடி கால்பந்தாட்ட சம்மேளனம்.
செயலாளர்,
காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்

Leave a comment