தாயும் மகளும் சிறுமிகள்: இலங்கையில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகம்

child abuseபண்டாரவளை: பண்டாரவளை பிரதேசத்தில் 13 மற்றும் 15 வயதான சகோதரிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மைத்துனரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 22 வயதான சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சிறுமிகளின் தந்தை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருவதுடன் தாய் வெளிநாடு ஒன்றில் தொழில் புரிந்து வருகிறார். 15 வயதான சிறுமி இதற்கு முன்னர் தனது மைத்துனரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவருக்கு தற்போது 4 வயதில் மகள் இருப்பதாகவும் தெரியவருகிறது.

சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவது இலங்கையில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கிராமப் புறங்களில் சிறுமிகள் இவ்வாறான பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர். தாய்மார் வெளிநாடுகளில் தொழில் புரிந்து வரும் நிலையில், பிள்ளைகளை உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு போவதால், இவ்வாறான சமூக சீர்கேடுகள் ஏற்பட காரணமாகி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Published by

Leave a comment