பீபா 2014 உலகக் கிண்ணம்: கமெரா பொருத்தப்பட்ட புதிய பந்து அறிமுகம்!

ball (2)பிரேசிலியா: பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள உலக கிண்ண உதைபந்தாட்ட போட் டித் தொடரில்  பயன்படுத்தப்பட உள்ள அதிகாரப்பூர்வ பந்துக்கு ‘பிரசூகா’ என்று பெயரிட்டுள்ளனர். பிரேசில் நாட்டு மக்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் இந்த பெயரை கோடிக்கணக்கான ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்துள்ளனர்.

நீலம், பச்சை, செம்மஞ்சள் வண் ணக் கோடுகளுடன் கண்களைப் பறிக்கும் பிரசூகா, அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள் ளது. கடந்த 2010 உலகக் கிண்ணப்போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட ஜபுலானி வகை பந்து மீது வீரர்கள் பல்வேறு குறைபாடுகளைக் கூறிய நிலையில், பிரசூகா எல்லா வகையிலும் மேம்பட்ட பந்தாக இருக்கும் என்று, இதை வடிவமைத்துள்ள அடிடாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பந்து காற்றில் பறந்து வரும் திசையை எளிதில் கணிக்கலாம். வீரர்கள் தங்களுக்குள் துல்லியமாகப் ‘பாஸ்’ செய்யவும் முடியும் என்கிறார்கள்.

ball (2)

மேலும், களத்தில் நடக்கும் காட்சிகளை பல்வேறு கோணங்களில் பார்க்க வசதியாக, இந்த பந்தில் 6 ‘எச்.டி’ கமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக போட்டை காணும் இரசினர்கள் பல கோணங்களில் காட்சிகளை இரசிக்க முடியும் எதிர்பார்க்கப்படுகிறது.

ball

Published by

Leave a comment