கொழும்பு: பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் நான்கு இலட்சம் பாடசாலை மாணவர்களில் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் மாணவர்களின் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களே இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜி. ஏ. ஆர். தேவப்பிரிய தெரிவித்தார்.
இம்மாதம் 31 ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதால் அசெளகரியங்களை தவிர்க்கும் வகையில் எஞ்சியுள்ள மாணவர்களின் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு பாடசாலை அதிபர்களை கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கல்வி அமைச்சு, கல்வி திணைக்கள அதிகாரிகள், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், பாடசாலை அதிபர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே கடிதம் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு மற்றும் சமகால நடப்பு விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலு ள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் அதன் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தலைமையில் நடைபெற்றது.
பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜி. ஏ. ஆர். தேவப்பிரிய மேலும் விளக்கமளிக்கையில்,
பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் கடைசி நேரத்தில் கிடைக்கப் பெறுவதினால் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது. கடந்த கால அனுபவங்களை கருத்திற் கொண்டே இம்முறை நேரகாலத்துடன் அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். எனினும். இதுவரை ஒரு இலட்சத்து 25 ஆயிரம் விண்ணப்பங்களே கிடைக்கப் பெற்றுள்ளன.
தேவையை கருத்திற் கொண்டு ஒக்டோபர் வரை வழங்கலாம் என்றாலும், கால தாமதம் மற்றும் அசெளகரியங்களை தவிர்க்கும் வகையிலேயே நேர காலத்துடன் கோரப்படுகிறது. அதேபோன்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிக்கு 16 வயது பூர்த்தியாகும். மாதங்கள் அடிப்படையில் தனித்தனியாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் கோருகின்றோம். அப்போது மிகவும் இலகுவாக தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க முடியும் என்றார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் :-
விரல் அடையாளம் உட்படுத்தப்பட்டு நவீன முறையில் தயாரிக்கப்படும் கணனி மயப்படுத்தப்படவுள்ள ஈ-அடையாள அட்டை 2016 ஆம் ஆண்டு முதல் விநியோகிக்க ஆட்பதிவு திணைக்களம் திட்டமிட்டுள்ளதுடன் இதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போதே ஆரம்பிக் கப்பட்டுள்ளது. அதேபோன்று தற்பொழுது 16 வயது பூர்த்தியானவர்களுக்கே அடையாள அட்டை விநியோகிக்கப் படுகின்றது. புதிய முறையின் படி. 15 வயது பூர்த்தியானதும் அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.tk
Published by
![id%20card[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/id20card1.jpg?w=142&h=99)
Leave a comment