Category: Your Kattankudy
-
இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வருகிறார்
– S-90 டெல்லி: இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டுள்ளார். விரைவில் அவர் இலங்கை செல்லவுள்ளதாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை செயலாலர் சுஜாதா சிங் கூறியுள்ளார்.
-
குடும்பத்தினர் சம்மதமின்றித் திருமணம்: பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற பெற்றோர்
லாகூர்: பாகிஸ்தானின், லாகூர் நகரின் உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே, ஒரு பெண்ணை அவரது குடும்பத்தினரே கல்லால் அடித்துக் கொலை செய்திருக்கின்றனர். அந்தப் பெண், தங்கள் சம்மதமில்லாமல், ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பதுதான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று அந்தக் குடும்பத்தினர் கூறினர்.
-
மாயமான விமானம் கடலுக்குள் விழுந்ததை கண்டறிய உதவிய செய்மதி தகவல்கள் வெளியீடு
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தின் செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு இன்று வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 மாயானது. பின்னர் அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது.
-
ஈரானில் நிலநடுக்கம்: அதிர்ந்தது துபாய்!
– SHM துபாய்: ஈரானில் 5.1 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து துபாயில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ஈரானில் உள்ள க்வெஷம் தீவின் தென்மேற்கில் 66 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்தது.
-
மோடி பதவியேற்பு விழாவுக்கு போகாமல் பேஸ்புக்கில் போட்டோ போட்டு சிக்கிய இந்திய அமைச்சர்
– S-90 டெல்லி: டெல்லிக்கு போகாமலே மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றபோது அவருடன் இருந்ததாக போலியாக பேஸ்புக்கில் படம் போட்ட கோவா சுற்றுலாத்துறை அமைச்சர் திலிப் பாருலேக்கர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கோவா மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் திலிப் பாருலேக்கர் தனது பேஸ்புக் பக்கத்தில் நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவில் ஒன்றாக தான் நிற்பதுபோல உள்ள படத்தை வெளியிட்டிருந்தார்.
-
ஜமாலியா மக்தப் அல்குர்ஆன் மதரஸா ஆரம்ப வைபவம்
– பஹ்மியூஸூப் திருகோணமலை: அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலின் கீழ் திருகோணமலை ஜமாலியா முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலின் மேற்பார்வையில் ‘மக்தப் அல்குர்ஆன் மதரஸா’ கடந்த 25.05.2014ஆம் திகதி ஞயிற்றுக்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் மக்தப் ஆரம்ப வைபவம் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ஏ.ஜே.மஹ்ரூப் அவர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கபப்பட்டது.
-
மட்டு-மாவட்ட இளைஞர் கழக மாவட்ட சம்மேளனத்தின் உப தலைவராக ஊடகவியலாளர் பாரிஸ் தெரிவு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக மாவட்ட சம்மேளனத்தின் உப தலைவராக மட்டு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
-
மதரசதுல்ஹிக்மாவின் மாணவர் ஒன்றுகூடல்
– FM. பர்ஹான் காத்தான்குடி: புதிய காத்தான்குடி பெரிய ஜூம் ஆப்பள்ளிவாயல் நிருவாகத்தின்கீழ் இயங்குகின்ற மதரஸதுல் ஹிக்மா பகுதி நேர ஹிப்ழ் மதரஸாவின் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வு 24.05.2014 ஞாயிற்றுக்கிழமை பாலமுனை கடற்கரை வழவில் இடம் பெற்றது.
-
‘சிகரெட் பிடித்தால் அரச வேலை இல்லை’
ராஜஸ்தான்: சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் உபயோகிப்பவர்களுக்கு வேலை வழங்குவது இல்லை என ராஜஸ்தான் அரசின் மின் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு அரசாங்க வேலை வழங்க வேண்டாம் என மாநில அளவிலான புகையிலை கட்டுப்பாட்டு குழு ராஜஸ்தான் அரசுக்கு கடந்த 2012ல் பரிந்துரை செய்தது.
-
ஜனாதிபதி மஹிந்த அரசியலில் கால் பதித்து இன்றுடன் 44 ஆண்டுகள் பூர்த்தி
கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அரசியலில் கால்பதித்து இன்றுடன் 44 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. சிறந்த ஆளுமை, துணிவு, அரசியல் சாணக்கியம் மிக்க தலைமைத்துவத்திற்குப் பாத்திரமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தாம் பிறந்த கிருவாபத்துவ என்ற இடத்துக்கு மட்டுமின்றி முழு இலங்கைக்கும் உரித்தான கெளரவ தலைவராகத் திகழ்கிறார்.
-
‘இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்’
கராச்சி: இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், கொல்கத்தா அணியின் பயிற்சியாளருமான வசிம் அக்ரம் வலியுறுத்தியுள்ளார்.
-
பள்ளிப் பாடமாகிறது மோடியின் வாழ்க்கை வரலாறு
– S-90 அஹ்மதாபாத்: இந்தியப் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு இன்னும் சிறிது நாட்களில் மத்திய பிரதேச பாடப் புத்தகங்களில் சேர்க்கப்படும் எனத் தெரிகின்றது.இந்திய பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப்பாடத் திட்டத்தில் சேர்க்க மத்திய பிரதேச அரசு பரிசீலித்து வருகிறது.