‘ஒருபோதும் சிந்தியிராத கண்ணீரில் ஒரு துளியை விட்டுச் செல்லுங்கள்’ கொல்லப்பட்ட மாணவியின் இறுதி முகநூல் வரிகள்…

dath[1]கொழும்பு: கொழும்பு பல்கலைக் கழக மாணவி டிமாசா கயனகி திமான இராணுவச்சிப்பாயால் படுகொலை செய்யப்படுவதற்கு முன் தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவு செய்திருந்த சிங்களக் கவிதையின் தமிழ் வடிவம் இது. இதனை முக நூல் நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள்… மனதை மிகவும் பாதித்திருந்த கவிதை இது… அதனை நாமும் பகிர்ந்து கொள்கிறோம்…

எப்போதேனுமொரு நாள் இவையெல்லாவற்றையும்
விட்டுச் செல்லவேண்டியிருக்கும்
எவரும் மகிழ்ச்சியாகச் செல்லும் பயணமல்ல அது
எனினும் அதை
துயரமின்றிச் செல்லமுடிந்தால்
எவ்வளவு நன்றாகவிருக்கும்

அந்நாளில்
நினைவில் வராதோர் அனேகர்
எனினும்
நினைவில் வரக் கூடிய சிலரில்
நீங்கள் இருப்பீர்களென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது

நான் மரிக்கும் நாளில் வாருங்கள்
என்னைப் பார்க்கவென்றே வந்துசெல்லுங்கள்
ஒருபோதும் சிந்தியிராத கண்ணீரில்
ஒரு துளியை விட்டுச் செல்லுங்கள்

இரு விழிகளும் இறுக்கமாக மூடப்பட்டிருந்த போதிலும்
குளிர்ந்த சரீரத்துடனிருந்த போதிலும்
முன்பு பழகியதையெண்ணி
நெற்றியிலொரு முத்தமிடுங்கள்

ஆயிரம் கண்கள் பார்த்திருக்கும்
எனது நற்குணங்களை விமர்சிக்கும்
பதிலாக எதுவும் பேசாது
ஒரு பிடி மண்ணிட்டுச் செல்லுங்கள்

கல்லறையிலிருந்து நீங்கள்
நீங்கிச் செல்கையில்
மாபெரும் தனிமையை நான் உணரக் கூடும் – எனவே
ஒரு பூவை மட்டும் வைத்துவிட்டு
நீங்கள் செல்லுங்கள் திரும்பிப் பாராது

– செல்வி. டிமாஷா கயனகி
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

dath[1]

Dimasa[1]

Published by

Leave a comment