Category: Your Kattankudy
-
23 இலட்சம் ரூபாய் செலவில் கொங்ரீட் வீதியாக புனரமைக்கப்படவுள்ள காத்தான்குடி – 02 இமாம் அபூ ஹனிபா வீதிக்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் மக்கள் பாவனைக்குதவாத வீதிகளை புனரமைக்கும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் தற்போது நடைபெற்று வருகின்றன.
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது – காத்தான்குடியில் றவூப் ஹக்கீம்
எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: உலக இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கும் இடையே தொடர்புள்ளதாக தெரிவிப்பதானது சுத்த மடமையிலும் ஒரு மடமைத்தனமான ஒரு கூற்றாகும். இதனை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம் நேற்று காத்தான்குடியில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்பு தொடர்பான கூட்டத்தின்போது தெரிவித்தார்.
-
‘இரு வாரங்களுள் இருந்த இடத்தில் பள்ளிவாசல்’- முதல்வர் மஜீதிடம் படைத்தரப்பு உறுதி
திருகோணமலை: கருமலையூற்று பள்ளிவாசல் விவகாரத்தைப் பூதாகரப்படுத்தி அரசியல் இருப்பைத் தக்கவைக்கும் முயற்சியைக் கைவிடுமாறு கிழக்கு முதல்வர் நஜீப் ஏ. மஜீத் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
-
வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 2205 குடும்பங்களுக்கு நீர் சேகரிக்கும் கொள் கலன்கள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நீர் தாங்கிகளின் (பவுசரின்) ஊடாக விநியோகிக்கப்படும் நீரை மக்கள் சிரமம் இல்லாமல் பெற்றுக்கொள்வதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நீர் சேகரிக்கும் கொள் கலன்கள் 23-08-2014 இன்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
-
கடந்த 24 மணி நேரத்துக்குள் 100 ரொக்கட்டுக்கள் இஸ்ரேலுக்குள் வீழ்ந்தன! சிறுவன் பலி, 10 பேர் காயம்!!
– MJ டெல் அவிவ்: கடந்த 24 மணிநேரத்திற்குள் காஸாவிலிருந்து ஏவப்பட்ட சுமார் நூறுக்கும் அதிகமான ரொக்கட்டுகள் இஸ்ரேல் நகரங்களில் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும், இதன் காரணமாக 4வயதுச் சிறுவன் கொல்லப்பட்டும், பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து இருப்பதாகவும் இஸ்ரேல் தெரவித்துள்ளது.
-
ரொக்கட் அச்சத்தால் ஓடி ஒழியும் இஸ்ரேலிய மக்கள்
– MJ ஜெரூஸலம்: அயர்ன் டோமின் ஏவுகணை எதிர்ப்பு ராடார் சமிக்கை மற்றும் ஏவுகணை எதிர்ப்பு ரொக்கட்டுக்களையும் தாண்டி, ஹமாஸின் நவீன ரக ரொக்கட்டுகள் இஸ்ரேல் பிரதேசங்களில் தினமும் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருப்பதால், அயர்டோமை நம்பியிருந்த இஸ்ரேலிய மக்கள் தற்பொழுது நம்பிக்கை இழந்து, பாதுகாப்பான இடங்களுக்குள் ஓடி ஒழிந்துவரும் நிலை ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் இஸ்ரேலின் பாதுகாப்பை விமர்சித்து வருகின்றன.
-
செய்தியாளர் கொலைக்கு கோபமாக இரங்கல் தெரிவித்து விட்டு கோல்ப் விளையாடச் சென்ற ஒபாமா!
– SHM வாஷிங்டன்: அமெரிக்க செய்தியாளர் ஜேம்ஸ் போலி படுகொலைக்கு இரங்கலும், இஸிஸ் தீவிரவாதிகளை ஒழிப்போம் என்று கோபமாகவும் பேசி அறிக்கை வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, அதன் பின்னர் கோல்ப் விளையாடப் போனது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உமர் சன சமூக நிலையத்தின் கீழ் இயங்கிவரும் அல்-உமர் பாலர் பாடசாலை பாலர்களின் 2014 மாபெரும் உளவள ஆக்கத்திறன் கண்காட்சி
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உமர் சன சமூக நிலையத்தின் கீழ் இயங்கிவரும் அல்-உமர் பாலர் பாடசாலை பாலர்களின் 2014 மாபெரும் உளவள ஆக்கத்திறன் கண்காட்சி புதிய காத்தான்குடி -06 அல்-உமர் பாலர் பாடசாலையில் 22-08-214 வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
-
இஸ்ரேலுக்குள் மாயமாய் விழும் ஹமாஸின் ரொக்கட்டுக்கள்
– MJ டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக காஸாவிலிருந்து ஹமாஸினால் ஏவப்படும் ரொக்கட்டுக்கள், இஸ்ரேலின் அயர்ன் டோமின் கண்காணிப்புக்களிலிருந்து மறைந்து மாயமாய் இஸ்ரேல் நகரங்களுக்கு தொடர்ந்தும் வீழ்ந்து வெடிக்கின்றன.
-
பிரயாணிகளின் நன்மை கருதி மட்டக்களப்பு – கல்முனை மஞ்சன்தொடுவாய் பிரதான வீதியில் ஜாமிஉல் கர்னி ஜூம்மா பள்ளிவாயல் திறந்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் அபிவிருத்திற்கும் மனிதாபிமானத்திற்குமான சர்வதேச அமைப்பின் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வெளி ஊரிலிருந்து வரும் பிரயாணிகளின் நன்மை கருதி மட்டக்களப்பு –கல்முனை
-
கடலுக்கு செல்லும் மீனவர்களின் நன்மை கருதி பூநொச்சிமுனை கடற்கரையில் ‘மஸ்ஜிதுல் Bபஹ்ர்’ பள்ளிவாயல் திறந்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் பூநொச்சிமுனை: ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் அபிவிருத்திற்கும் மனிதாபிமானத்திற்குமான சர்வதேச அமைப்பின் 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடலுக்கு செல்லும் மீனவர்களின் நன்மை கருதி பூநொச்சிமுனை கடற்கரையில் ‘மஸ்ஜிதுல் Bபஹ்ர்’ பள்ளிவாயல் 22-08-2014 இன்று வெள்ளிக்கிழமை அஷர் தொழுகையுடன் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
-
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவற்றுகிடையே ஊவா தேர்தல் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
– PMGG ஊடகப்பிரிவு கொழும்பு: ஊவா மாகாணசபைத் தேர்தலையொட்டி ஐக்கிய தேசிய கட்சிக்கும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (22) வெள்ளிக்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.