டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக காஸாவிலிருந்து ஹமாஸினால் ஏவப்படும் ரொக்கட்டுக்கள், இஸ்ரேலின் அயர்ன் டோமின் கண்காணிப்புக்களிலிருந்து மறைந்து மாயமாய் இஸ்ரேல் நகரங்களுக்கு தொடர்ந்தும் வீழ்ந்து வெடிக்கின்றன.
நேற்று வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் அஸ்ஸொட் நகரில் வீழ்ந்த காஸாவின் ரொக்கட்டுக்கள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களில் வீழ்ந்து வெடித்தது. இதனால் வாகனங்கள் முற்றாக சேதமடைந்தன. இதன்போது இஸ்ரேலின் 4 வயதுச் சிறுவன் காயமடைந்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இஸ்ரேலின் இரும்புக்கோட்டையாகக் கருதப்படும் அயர்ன்டோம், என்னதான தனது அவதானிப்புக்களை மேற்கொண்டுவருகின்ற போதிலும், அயர்ன் டோமின் ராடர்களில் இருந்து மாயமாக மறைந்து இஸ்ரேல் நகரங்களை கடந்த சில நாட்களாக இலக்கு வைத்து வருகின்றன இத்தகைய ரொக்கட்டுகள்.
ஈரானின் மிக சக்திவாய்ந்த ஏவுகணைகளையே தற்பொழுது ஹமாஸ் பயன்படுத்தி வருகின்றது. இந்நிலையில், தொடர்ந்தும் இத்தகைய ரொக்கட்டுக்கள் இஸ்ரேலில் வீழ்வதை அயர்ன் டோமினால் தடுத்து நிறுத்த முடியாமல் போகுமெனின், மீண்டுமொரு யுத்த நிறுத்தத்திற்கு இஸ்ரேல் கோரிக்கையை முன்வைக்கும் என்பதில் சந்தேகமில்லை!
இஸ்ரேலின் அஸ்ஸொட் நகரில் ஹமாஸின் ரொக்கட் தாக்குதலுக்கு இலக்கான வாகனங்கள்
Leave a comment