ரொக்கட் அச்சத்தால் ஓடி ஒழியும் இஸ்ரேலிய மக்கள்

israel1– MJ

ஜெரூஸலம்: அயர்ன் டோமின் ஏவுகணை எதிர்ப்பு ராடார் சமிக்கை மற்றும் ஏவுகணை எதிர்ப்பு ரொக்கட்டுக்களையும் தாண்டி, ஹமாஸின் நவீன ரக ரொக்கட்டுகள் இஸ்ரேல் பிரதேசங்களில் தினமும் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருப்பதால், அயர்டோமை நம்பியிருந்த இஸ்ரேலிய மக்கள் தற்பொழுது நம்பிக்கை இழந்து, பாதுகாப்பான இடங்களுக்குள் ஓடி ஒழிந்துவரும் நிலை ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் இஸ்ரேலின் பாதுகாப்பை விமர்சித்து வருகின்றன.

காஸாவிலிருந்து ஏவப்படும் ரொக்கட்டுக்கள் இஸ்ரேல் எல்லையில் வரும்பொழுது ஏவுகணை அபாய சமிக்கைகள் குறிப்பிட்ட இஸ்ரேலிய நகரங்களுக்குள் ஒலியெழுப்பி மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அயர்ன் டோம் உதவி வந்ததது. அது மாத்திரமன்றி, இஸ்ரேலுக்குள் வரும் ஏவுகணைகளை வானில் வைத்து வழிமறித்து, செயலிழக்கச் செய்யும் ரொக்கட்டுக்களையும் அயர்டோம் இதுவரையில் செயற்படுத்தி வந்தது.

israel1

இதன்காரணமாக அபாய சமிக்கைகள் ஒலித்தாலும், அயர்டோம் பாத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில்தான் இதுவரை இஸ்ரேல் மக்கள் இருந்து வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக அயர் டோமின் ராடர்களில் படாமல், ஹமாஸின் ரொக்கட்டுக்கள் இஸ்ரேலுக்குள் மாயமாக வீழ்ந்து வெடிப்பதால் இதுவரையிலும் அயர் டோமை நம்பியிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் ஓடிச் செல்லும் பதட்ட நிலை அங்கு தற்பொழுது காணப்படுகிறது.

இதற்கிடையில் ரொக்கட் தாக்குதல்களில் வீடுகளை இழந்துள்ள இஸ்ரேலியர்கள் சிலர் அகதி முகாமில் தங்க அவைக்கப்பட்டுள்ளனர். இது இஸ்ரேலியர்களை பெரிதும் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது. ஏனெனில் இஸ்ரேலியர்கள் முதன் முதலாக அகதி என்ற அந்தஸ்தில் இஸ்ரேலியர் கருதப்படுவது கடந்த கால போர் சூழல்களில் இது முதற்தடவையாகும்.

Published by

Leave a comment