Category: Your Kattankudy
-
மாயமான மலேசிய விமானம்: விமானி ஒட்சிஜனைத் துண்டித்திருக்கலாம்!
– SHM கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ல் பயணம் செய்தவர்கள் பிராண வாயு இல்லாமல் மூச்சுத் திணறி பலியாகியிருக்கலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஒல்லிக்குளம் கிச்சான் பள்ளம் புதிய பாதைக்கான மின் இணைப்பு
– FM.பர்ஹான் ஒல்லிக்குளம்: அமைச்சர் அல்ஹாஜ் பஷீர் சேகுதாவூத் அவர்களின் முன்னெடுப்பு நடவடிக்கையின் பயனாக மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச சபையின் கீழ் அமைந்துள்ள ஒல்லிக்குளம் கிச்சான் பள்ளம் ஆகிய கிராமங்களை இணைக்கும் புதிய பாதைக்கான மின்விநியோக இணைப்பை இலங்கை மின்சார சபை 18.08.2014 அன்று வழங்கியது.
-
‘கோமாளி சுப்ரமணிய சுவாமிக்கு, கூட்டமைப்பின் இந்திய பயணம் நல்ல ஒரு சாட்டையடி’ – மனோ கணேசன்
கொழும்பு: சுப்ரமணியன் சுவாமி என்ற ஒரு கோமாளியை இங்கே அழைத்து வந்து, அவரை இந்திய அரசின் பிரதிநிதி என்று, அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் உருவகப்படுத்தி காட்ட, இலங்கை அரசாங்கத்தால் முடியுமானால், இந்திய அரசின் கதாநாயகனான நரேந்திர மோடியை சந்தித்து, 13ம் திருத்தம் தொடர்பாகவும், அதை மென்மேலும் விரிவாக்குவது தொடர்பாகவும் உரையாட தமிழ் தேசிய கூட்டமைப்பால் முடியும்.
-
சாவகச்சேரி இந்துக்கல்லூரி பிரதிநிதிகள் சந்திப்பு!
– FM. பர்ஹான் கொழும்பு: சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்றைய தினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து பாடசாலை தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
-
இஸ்லாமிய இளைஞசர் முன்னணியினால் நிகழ்த்தப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான உளவியல் சார் முன்னேற்ற கருத்தரங்கு
– FM.பர்ஹான் கொழும்பு: இஸ்லாமிய இளைஞசர் முன்னணியினால் 19/08/2014 ம் அன்று நிகழ்த்தப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான உளவியல் சார் முன்னேற்ற கருத்தரங்கு கொழும்பு பல்கலைகழக பேராசிரியர் Dr. பவ்சுள் ஹக் அவர்களால் நடத்தப்பட்டது.
-
‘அர்ஷின் நிழலில்’ தொடர்-2 என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி (21-08-2014) வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
‘இன்னுமொரு அமெரிக்கரை சிறைப்பிடித்திருக்கிறோம்:முடிவு அமெரிக்காவின் கையில்’ -இஸிஸ்
பக்தாத்: இஸிஸ் போராளிகள் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரை தலையைத் துண்டித்துப் படு கொலை செய்துள்ளனர். மேலும் ஒரு அமெரிக்கரையும் தாங்கள் சிறை பிடித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்க ஊடகவியலாளரை சிரச்சேதம் செய்யும் இஸிஸ்
லண்டன்: சிரியாவில் ‘இஸ்லாமிய அரசு’ போராளிகளால் கொல்லப்பட்ட அமெரிக்க செய்தியாளர் ஜேம்ஸ் ஃபாலியின் தாய், தனது மகன் சிரியா மக்கள் படும் இன்னல்களை வெளியே கொண்டுவரும் பணியில் தனது உயிரை இழந்திருக்கிறார் என்று அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
-
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டு- மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட 4000 வீடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரனையுடன் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 4000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த வீடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம் 19-08-2014 நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
-
காத்தான்குடியில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தினரால் சுவரொட்டிகள்
எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடியில் நேற்று இவ்வாறு சுவரொட்டிகள் (போஸ்டர்கள்) ஒட்டப்பட்டிருந்தன. ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தினரால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பலஸ்தீனத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பலஸ்தீனத்திற்கு உதவவேண்டும் என்ற கோரிக்கையை அதிமேதகு ஐனாதிபதி அவர்கள் ஏற்று 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவி வழங்க முன்வந்தமைக்காக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத்தினரால் நன்றி தெரிவிப்பதாக அச்சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
அல் மனார் நிறுவனத்தின் ரமழான் விஷேட அறிவியியல் போட்டி நிகழ்ச்சிக்கான பரிசளிப்பு விழா
எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: அல் மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் புனித ரமழான் மாதத்தில் இடம்பெற்ற விஷேட அறிவியியல் போட்டி நிகழ்ச்சிக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 24-08-2014 அன்று பி.ப.4.00 மணிக்கு அல் மனார் வளாக அர்ராஷித் மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக அதன் செயலாளர் நாயகம் ஏ எல் எம் மும்தாஸ் மதனி இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெரிவித்தார்.