Category: Your Kattankudy
-
‘லட்சக்கணக்கானவர்களை பாதுகாக்க ஐநா தவறிவிட்டது’- நவி பிள்ளை
ஜெனீவா: உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை என்று பதவி விலகிச்செல்லும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
-
வடிகான் மற்றும் அதன் அபிவிருத்தி வேலைகளை பார்வையிடுவதற்காக கொரியா நாட்டில் இருந்து நிபுணர் குழுவினர் வாழைச்சேனை,ஓட்டமாவடி பிரதேசங்களுக்கு விஜயம்
– எம்.ரீ.எம்.பாரிஸ் வாழைச்சேனை: மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று,ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு ஆகிய இரு பிரதேச சபை எல்லைகுற்பட்ட பகுதிகளில் வாழும் பொது மக்கள் வெள்ள அனர்த்த காலங்களின் போது வடிகான் அமைப்பின்றி பல்வேறு பட்ட துன்பங்களையும், கஸ்டங்களையும் அனுபவித்து வந்தனர்.
-
ஐஸ் குளியலுக்கு சம்மதித்துள்ள பிரபலங்கள்
நியூயோர்க்: ஏ.எல்.எஸ். நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஐஸ் பக்கெட் சவாலை பல பிரபலங்கள் ஏற்றுள்ளனர். ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு தொடர்பான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நிதி திரட்டவும் ஐஸ் பக்கெட் சவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
-
எகிப்தில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: சவுதி, ரஷ்யாவை சேர்ந்த 33 பயணிகள் பலி!
– SHM கெய்ரோ: எகிப்து நாட்டில் இரு பஸ்கள் மோதிய விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர். இதில் சவுதி அரேபியா, எமன், ரஷ்ய நாட்டுக்காரர்களும் அடங்குவர். எகிப்து நாட்டின் சார்ம் அல்-செயிக் பகுதியிலிருந்து புறப்பட்ட பஸ்சும், நிலே டெல்டா பகுதியில் இருந்து புறப்பட்ட மற்றொரு பஸ்சும், இன்று அதிகாலை சினாய் என்ற பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
-
காஸாவில் மக்களைக் கொல்வதற்கான ஒருநாள் செலவு இஸ்ரேலுக்கு 60 மில்லியன் டொலர்கள்!
– MJ டெல் அவிவ்: காஸா மக்கள்மீது போர் மேற்கொள்வதற்காக இஸ்ரேலுக்கு நாளொன்றுக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகின்றன. இராணுவம், மருத்துவம், ஆயுததளபாடங்கள் மற்றும் இராணுவப் புலனாய்வு போன்ற விடயங்களுக்கு நாளொன்றுக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இஸ்ரேலுக்குச் செலவாகின்றன.
-
கோத்தாவின் சர்வதேச வர்த்தகம்
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் பெருந்தொகைப் பணத்தைக் கொண்டு சர்வதேச ரீதியாக பெரும் வர்த்தக முயற்சிகளில் கோத்தபாய ராஜபக்ச இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்ட யுத்தவெற்றியினை அடுத்து விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகைப் பணம் மற்றும் தங்கம் என்பன இராணுத்தினரால் கைப்பற்றப்பட்டன.
-
‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உலக தலைவர்களுக்கு சிறந்த முன்மாதிரி’ – பில்கேட்ஸ் புகழாரம்
கொழும்பு: இலங்கையில் சமூக – பொருளாதார ரீதியாக துரித வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள முதலீடு மற்றும் முயற்சிகளை பாராட்டியுள்ள மைக்ரோசொப்ட் நிறுவன ஸ்தாபகர் பில் கேட்ஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏனைய உலகத் தலைவர்களுக்கு சிறந்த முன்மாதிரியெனவும் தெரிவி த்துள்ளார்.
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையைத் துண்டித்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்?
– SHM லண்டன்: இஸிஸ் அமைப்பால் சிரியாவில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ்போலியைக் கொலை செய்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹேமன்ட் தெரிவித்துள்ளார்.
-
‘சவூதி அரேபியாவில் மரண தண்டனைகள் அதிகரிப்பு’
றியாத்: சவூதி அரேபியாவில் இந்த மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன.அஒருவர் பில்லி சூன்யம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் சிரச்சேதம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-
அயர்ன் டோமைத்தாண்டி இஸ்ரேல் நகரங்களில் விழும் ஹமாஸின் ரொக்கட்டுக்கள்
– MJ ஜெரூஸலம்: இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடிகொடுக்கும் முகமாக ஹமாஸ் இராணுவத்தினால் ஏவப்படும் ரொக்கட்டுக்கள் இஸ்ரேலின் நகரங்களுக்குள் வெடித்துச் சிதறுகின்றன. பலம் பொருந்திய ஏவுகணை எதிர்ப்பு கோபுரமான அயர்ன் டோமின் சமிக்கைகளில் படாமல் இத்தகைய ரொக்கட்டுக்கள் இஸ்ரேலுக்குள் சென்று வெடிக்கின்றன.
-
நாசமாய்ப் போவாய் போ!!!!!!
– கவிஞர் காத்தூரி ஆடிக் கொண்டிருக்கிறாய் ஒரு பேயாட்டம் மனிதம் வெட்கித் தலைகுனியும் படி மானம் கெட்ட உன் செயலால் மனிதனாயிருக்க வெட்கப் படுகிறேன்