Category: Your Kattankudy
-
கொழும்பு புறக்கோட்டையில் மிதக்கும் வர்த்தகத் துறைமுகம் திறப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஆசியாவின் ஆச்சரியம் நோக்கிய அபிவிருத்தி செயற்திட்டமாக கொழும்பு புறக்கோட்டை பஸ்ரியன் மாவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மிதக்கும் வர்த்தகத் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டது.
-
இலங்கை இளைஞர் பாரளுமன்றத்தின் 10 ஆவது அமர்வு எதிர்வரும் 30ம்,31ம் திகதிகளில் மஹரகம இளைஞர் நிலையத்தில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மஹரகம: இலங்கை இளைஞர் 2ஆவது பாரளுமன்றத்தின் 10 ஆவது அமர்வு எதிர்வரும் 30ம்,31ம் திகதிகளில் மஹரகம இளைஞர் நிலையத்தில் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் இடம்பெறும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா தெரிவித்தார்.
-
தப்பியோடிய ‘குடு நிலான்’ விமான நிலையத்தில் கைது
கொழும்பு: ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைதாகிய நிலையில் தப்பியோடிய தேவகே துசித்த எனும் குடு நிலான் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத விசாரணைப் பிரிவு இவரை கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.
-
‘மீண்டும் ஜனாதிபதியாக வர மகிந்தவுக்கு தகுதியில்லை’- சரத் சில்வா
கொழும்பு: இலங்கையில் கூடிய விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. அந்தத் தேர்தலில் தனது மூன்றாவது தவணைக்காக மகிந்த ராஜபக்ஷ போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
-
ஈரான் அணு உலையை வேவு பார்த்த இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!
தெஹ்ரான்: ஈரான் அணு உலையை வேவு பார்த்த இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ஈரானின் அணு உலைகளில் மின்சார உற்பத்தி மட்டுமின்றி பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களும் தயாரிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய உலகின் சில நாடுகளில் ஒன்றான இஸ்ரேல், அந்நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை எல்லாம் பறிமுதல் செய்து அழித்துவிட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றது.
-
கத்தார் ஸனாஇய்யாவில் ‘வாழ்வும் வழிபாடும்’ என்ற தலைப்பில் ஈமானிய அமர்வு இன்று இரவு
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) டோஹா: கத்தார் ஸனாஇய்யாவில் ‘வாழ்வும் வழிபாடும்’ என்ற தலைப்பில் இன்று 25 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து ஈமானிய அமர்வு பனார் இஸ்லாமிய கலாச்சார் நிலையம் ஸனாஇய்யா கிளையில் இடம்பெறும் இதனை அஷ்ஷெய்க் அலாவுத்தீன் (ஸலபி )நிகழ்த்துவார்.
-
காத்தான்குடி கலைஞர்களின் ‘கேள்விக்குறி’ நாடகம் நேத்ரா TV யின் யாத்திரை நிகழ்ச்சியில் இன்று
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி கலைஞர்களின் ‘கேள்விக்குறி ‘ நாடகம் 25-08-2014 இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு நேத்ரா TV யின் யாத்திரை நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
-
டப்கா ராணுவ விமானத் தளத்தை கைப்பற்றியது இஸிஸ்!
– AF-90 டமஸ்கஸ்: சிரியாவில் டப்கா ராணுவ விமான தளத்தை இஸிஸ் இயக்கம் கைப்பற்றியுள்ளாது. சிரியா மற்றும் ஈராக்கில் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள இஸிஸ், அவற்றை ஒருங்கிணைத்து இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை பிரகடனப்படுத்தியுள்ளனர்.
-
இஸிஸ் அமைப்பிற்கு எதிராக ஒன்றிணைகிறது மத்திய கிழக்கு நாடுகள்
றியாத்: இஸிஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதற்கான மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளின் இராஜதந்திர முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. தமது பதில் நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக எகிப்து, ஜோர்தான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு ஒன்றை சவுதி அரேபியா கூட்டியுள்ளது.
-
இஸ்ரேலுக்கு உளவு பாரத்த 2 பெண்கள் உள்பட 18 பலஸ்தீனியர்களை சுட்டுக் கொன்றது ஹமாஸ்!
– SHM காஸா: இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக 18 பேரை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொன்றுள்ளது ஹமாஸ் இயக்கம். ஏற்கனவே இஸ்ரேல் தாக்குதலால் சிதிலமடைந்து நிற்கும் காஸா மக்கள், இந்த சம்பவத்தால் மேலும் பீதியாகியுள்ளனர். 18 பேரையும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் நடுரோட்டில் நிற்க வைத்து சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளனர் ஹமாஸ் அமைப்பினர்.
-
அல்-மனார் நிறுவனம் றமழானில் நடாத்திய 2014 – றமழான் விஷேட அறிவியல் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: றமழான் மாதத்தில் ஒவ்வொருவரும் குர்ஆனோடும், நபி வழியோடும் தொடர்புகளை அதிகரிக்க வேண்டுமென்பதற்காக காத்தான்குடி அல்-மனார் நிறுவனம் றமழானில் நடாத்திய 2014- றமழான் விஷேட அறிவியல் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று 24-08-2014 ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி அல் மனார் அர்ராஷித் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
கருமலையூற்று பள்ளிவாயல் உடைப்பு விடயத்தில் பாதுகாப்பு செயலாளரின் நிலைப்பாடு என்ன? ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் முபீன்
பழுலுல்லாஹ் பர்ஹான் கருமலையூற்று: இலங்கையில் முஸ்லிம்களின் மத உரிமைகளை கேள்விக்குள்ளாக்கி அவற்றை மறுக்கும் மன நிலையை உருவாக்குவதில் சிங்கள பௌத்த தீவிரவாதிகள் தொடராக செயற்பட்டு வருகின்றனர். முஸ்லிம்கள் அன்மைக்காலமாக எதிர் நோக்கி வருகின்ற பல்வேறு மதரீதியான பிரச்சினைகளின் பிண்ணனியில் பௌத்த தீவிரவாதிகள் செயற்பட்டு வருவது நாடறிந்த உண்மையாகும். இவர்களுக்கு பக்க பலமாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இருப்பதாகவும் அவ்வப்போது குற்றம் சாட்டப்பட்டார் இக்குற்றச் சாட்டை பாதுகாப்பு செயலாளர் மறுத்தும் வருகிறார்.