Category: Your Kattankudy
-
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி மீராவோடை மீரா ஜூம்ஆப்பள்ளிவாயல் நிருவாகம் கௌரவிப்பு
– எம்.ரீ.எம். பாரிஸ் ஓட்டமாவடி: இவ்வருட 2014 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கல்வி கோட்ட பாடசாலை மாணவர்கள் மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயல் நிருவாகத்தினரால் இன்று (10) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையினை தொடர்த்து பெரும் திரளான மக்கள் மத்தியில் இம் மாணவர்கள் பாராட்டி கௌவிக்கப்பட்டனர்.
-
பிரத்தியேக செயலாளர் அப்துல் சமட் காலமானார்
– பழுலுல்லாஹ் பர்ஹான் அக்கறைப்பற்று: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முன்னாள் பிரத்தியேக செயலாளரும்,உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தற்போதய பிரத்தியேக செயலாளருமான அப்துல் ஸமட் இன்று காலமானார்.
-
அமைதிக்கான நோபல் பரிசு மலாலா மற்றும் கைலாஷ் ஆகியோருக்கு
லண்டன்: 2014-ம் ஆண்டின் சமாதானத்திற்கான நோபல் பரிசினை பாகிஸ்தானிய சிறார் கல்விச் செயற்பாட்டாளர் மலாலா யூஸஃப்சாய் மற்றும் இந்திய சிறார் உரிமைச் செயற்பாட்டாளர் கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் வென்றுள்ளனர்.
-
சமையல் எரிவாயு விலை 250 ரூபாவினால் குறைப்பு!!!
கொழும்பு: வீட்டுப்பாவனை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 250 ரூபாவினால் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று முதல் இந்த விலைக்குறைப்பை அமுல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதி அமைச்சின் அதிகாரிக்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளார்.
-
லண்டன் ‘அண்டர்கிரவ்ண்ட்’ புதிய ரயில்கள் அறிமுகம்
லண்டன்: 150 வருடங்கள் பழமையான லண்டன் ‘அண்டகிரவ்ண்ட்’ ரயில் சேவையானது, உலக நகரங்களுள் பிரபல்யமானவை. அவ்வப்போது புதிய ரயில்கள் மாற்றம்பெற்றாலும், தற்பொழுது புதிய, நவீன வடிவமைப்பில் அண்டகிரவ்ண்ட் ரயில்களை லண்டன் போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய ரயில்களின் படங்களை இங்கே காணலாம்.
-
அக்கரைப்பற்று ஆலிம் நகர் மையவாடிக்கான சுற்றுமதில் கையளிக்கும் நிகழ்வு
– ஹாசிப் யாஸீன் அக்கரைப்பற்று: திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அக்கரைப்பற்று ஆலிம் நகர் மையவாடிக்கான சுற்றுமதில் கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
-
யெமன் தற்கொலைத் தாக்குதல்கள்: 70 பேர் பலி!
– SHM சனா: யெமன் நாட்டின் தலைநகர் சனா உள்ளிட்ட 2 இடங்களில் நிகழ்த்தப்பட்ட வெவ்வேறு தற்கொலைப்படை தாக்குதல்களில் மொத்தம் 70 பேர் பலியாகியுள்ளனர். யெமன் தலைநகர் சனாவை அண்மையில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் கைப்பற்றினர். அதே நேரத்தில் கிளர்ச்சியாளர்களும் இந்த நகரைக் கைப்பற்ற போராடி வருகின்றனர்.
-
மாஞ்சோலை மீள்குடியேற்ற மக்களுக்கு தற்காலிக குடிசைகள் அமைப்பதற்கான உதவிகள்
– எம்.ரீ.எம். பாரிஸ் மாஞ்சோலை: மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு மாஞ்சோலை மீள்குடியோற்ற மக்களுக்கு தற்காலிக குடிசைகள் அமைப்பதற்கான உதவிகள் மீள்குடியேற்ற அமைச்சினால் இன்று மாலை வியாழன் (09) வழங்கி வைக்கப்பட்டது.
-
ஊடகங்களுக்கு உதவ ஹஜ் மாதத்தினை நல்லதொரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்வோம்
–காத்தநகர் டீன்பைரூஸ்- முஸ்லீம் ஊடகங்களும் அதன் தேவைப்பாடுகளும். உலக வரலாற்றில் நாட்டில் வாழும் ஒரு சமூகம் நிம்மதி,சந்தோசத்துடனான வாழ்வு,பாதுகாப்பு,அதி கூடிய சுதந்திரத்துடன் வாழ்வதற்கும், வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் ஊடகம் (MEDIA) மிக காத்திரமான பங்களிப்பினை செய்து வருகிள்றது.
-
இலங்கை முஸ்லிம்களைக் கையாள ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் கூட்டணி – பொதுபலசேனா
– AF- 90 கொழும்பு: ‘இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் வகையில் தெற்காசியாவில் இந்து-புத்த அமைதி மண்டலத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’ என்று இலங்கையின் புத்தமத கடும்போக்குவாதி அமைப்பான பொது பல சேனா தெரிவித்துள்ளது.
-
ஆளும் கட்சிக்குள் மனக்குழப்பம்!
கொழும்பு: அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் கடும் அதிருப்தி மனோநிலையில் இருப்பதால், அரசாங்கத்தின் அடித்தளம் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. தற்போதைய தகவல்களின் படி ஆளுந்தரப்பின் சிரேஷ்ட அரசியல்வாதிகளில் பலரும் கட்சி தாவி ஐ.தே.க. வுடன் இணைந்து கொள்வது அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டே தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
-
காத்தான்குடியில் இடம்பெற்ற கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல்
– எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல் காத்தான்குடியில் 07-10-2014 ம் திகதி மிக விமர்சையாக இடம்பெற்றது. வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்விற்கு போரத்தின் தலைவர் எஸ்.எம்.எம்.முஸ்தபா பலாஹி தலைமை வகித்தார்.