Category: Your Kattankudy
-
சிறுவர்களுக்கான ஹஜ் பெருநாள் பஸார் கிழக்குமாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக்கினால் திறந்து வைக்கப்பட்டது
-டீன்பைரூஸ்- காத்தான்ககுடி: காத்தான்குடி வரலாற்றில் மிக நீண்ட காலமாக அமுல்படுத்தப்பட்டு வரும் சிறுவர்களுக்கான பெருநாள் பஸார் நிகழ்வு இம்முறை காத்தான்குடி நகர சபையின் அனுசரணையுடன் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை)மைதானத்தினில் நடைபெறுகிள்றது. ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிபிலி பாறுாக் Eng ,காத்தான்குடி நகர முதல்வர் அல்ஹாஜ் SHMஅஸ்பர் JP , கௌரவ முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் KLM பரீட் JPஆகியோர் கலந்து கொண்டனர்.
-
உ/த. பரீட்சையில் சித்தியடைந்த 50,000 மாணவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க அரசு தீர்மானம்
கொழும்பு: க. பொ. த. உயர்தரத்தில் சித்தியடைந்த 50,000 மாணவர்களை ஆசிரியர் உதவியாளர்களாக நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்காக வேண்டியே ஆசிரிய உதவியாளர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.
-
காத்தான்குடிக்கு ஏன் இதுவரைக்கும் ஓர் தீயணைப்பு வாகனம் கிடைக்கப்பெறவில்லை? தவிசாளர் அஸ்பரிடம் கேள்வி
– எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: சுமார் 15 ஆயிரம் குடும்பம் மற்றும் 60,000 சனத்தொகையினைத் தொடும் காத்தான்குடி பிரதேசத்திற்கு எப்போது தீயணைப்பு வாகனம் கிடைக்கப்போகிறது என இப்பகுதியில் வாழும் பலர் அங்கலாய்க்கின்றனர். அண்மையில் அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட இத்தீயணைப்பு வாகனம் ஏன் காத்தான்குடி நகர சபைக்கு வழங்கப்படவில்லை?
-
இளம் குர்திஷ் பெண் போராளியின் தற்கொலைத் தாக்குதலில் 33 இஸிஸ் படையினர் பலி!
– AF – 90 டமஸ்கஸ்: ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக குர்திஷ் பெண் போராளி ஒருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 33 ஐ.எஸ். போராளிகள் பலியாகியுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ள இஸிஸ், தனி இஸ்லாமிய தேசத்தை பிரகாடனம் செய்து தொடர்ந்து அட்டூழியங்களை நிகழ்த்தி வருகிறது.
-
ஆசிய விளையாட்டு போட்டி முடிந்ததும் மாயமான 4 இலங்கை ஹொக்கி வீரர்கள்!
– MJ இன்சியான்: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்த உடனேயே 4 இலங்கை ஹொக்கி வீரர்கள் தலைமறைவாகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தென்கொரியாவின் இன்சியானில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைந்தன.
-
‘மஹிந்த சேல்’: யாழ்ப்பாணத்தில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் மோட்டார் சைக்கிள்கள்
யாழ்ப்பாணம்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகையின் போது வெளிக்களப் பணிகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுக்றது.
-
காத்தான்குடி-05 மஸ்ஜிதுல் ஹூதா சின்னப் பள்ளிவாயல்- மாபெரும் சிரமதானம் மூலம் துப்பரவு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் முதலாவது மாபெரும் சிரமதான நிகழ்வு 04-10-2014 சனிக்கிழமை காத்தான்குடி-05 மஸ்ஜிதுல் ஹூதா சின்னப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் 1990ஆம் ஆண்டு 103 முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்ட வேளையில் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் ஏற்பாடு செய்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 06-10-2014 இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகைகள்
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது பிரதேசத்தில் ஹஜ்ஜூப் பெருநாள் வெகுவிமர்சையாக இன்று கொண்டாடப்பட்டது. சாய்ந்தமருதில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை பள்ளிவாசல்களிலும், கடற்கரை முன்றலிலும் இடம்பெற்றன. சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் பிரதான ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும்இ குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது.
-
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 06-10-2014 இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் கடற்கரைத் திடலில் இடம்பெற்றது.
-
அன்பான வாசகர்களுக்கு ஈத் முபாறக்
இன்று இலங்கையிலும் மற்றும் அயல் பிரதேசங்களிலும் ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் எமது அன்பு வாசக இதயங்களுக்கு ஈதுல் அல்ஹா-ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். ஈத் முபாறக்
-
துல்ஹஜ் எட்டாம் நாளும் உழ்ஹிய்யாவும்: ஓர் வாசகரின் கேள்வி
– எம். பஹ்மி அப்துல் கைய்யூம் அஸ்ஸலாமு அலைக்கும் காத்தான்குடி: இலங்கை மக்கள் அனைவரும் இலங்கையில் பிறை கண்டதற்கமைவாக அல்லது, முதல் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்வதன் பிரகாரம் பெருநாளை கொண்டாடி வருகிறோம்.