Category: Your Kattankudy
-
ஓட்டமாவடி யங் சோல்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 9வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிரிக்கட் மற்றும் உதைபந்து வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: ஓட்டமாவடி யங் சோல்ஜர்ஸ் விளையாட்டுக்கழகம் 2014ம் ஆண்டுக்கான கோறளைப்பற்று மேற்கு கழகங்களுக்கிடையிலான கிரிக்கட், உதைப்பந்தாட்டம், எல்லே போட்டிகளில் வெற்றியீட்டுவதற்கு முழுப் பங்காற்றிய கழக வீரர்களை கௌரவிக்கும் முகமாகவும் புனித ஹஜ்ஜூப் பொருநாளை முன்னிட்டும் யங் சோல்ஜர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர்
-
பாலியல் துஸ்பிரயோக வழக்குத் தீர்ப்பு- ஒரு கண்ணோட்டம்
– அப்துல் அஸீஸ், புலனாய்வு அதிகாரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டம் பற்றிய அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது பொதுவான கோட்பாடாகும். சட்டம் பற்றித் தெரியாது என்பது குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பளிக்காது. சட்டம் எமது அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
-
வட்ஸ்அப் நிறுவனத்தை முழுமையாக கைபற்றியது பேஸ்புக்!!
– SHM நியூயோர்க்: 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாத துவக்கத்தில் பேஸ்புக் நிறுவனம் ‘மொபைல் மெசேஜிங் அப்ளிகேஷ’னை உருவாக்கிய வட்ஸ்அப் நிறுவனத்தை 19 பில்லியன் டொலருக்கு கைபற்ற உள்ளதாக அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தின் படி வட்ஸ்அப் நிறுவனத்தின் பங்கு மற்றும் நிறுவன சொத்துக்கள் மொத்த மதிப்பு 22 பில்லியன் டொலர் அளவு உயர்ந்து திங்கட்கிழமை வட்ஸ்அப் நிறுவனத்தை முழுமையாக கைபற்றியது பேஸ்புக்.
-
பெருநாள் சிறுவர் பஸாரும் ‘ரிபன்’ வெட்டுதலும்: வாசகர் கருத்து
காத்தான்குடி: இலங்கையில் காத்தான்குடிக்கு என்றே ஓர் தனிச்சிறப்பு பெருநாள் பாஸாருக்கு இருக்கிறது. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக காத்தான்குடியில் பெருநாள் காலங்களில் நடைமுறையிலிருந்து வரும் இத்தகைய பெருநாள் பஸார், ‘பொம்பு ரோட்டு’, ‘ஆலை’ எனும் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது.
-
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: கிழக்கில் இன்று இடியுடன் மழை
மட்டக்களப்பு: வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம் காரணமாக கிழக்கு கரையோரப் பகுதிகளிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
-
‘ஹஜ் வீசா முடிவதற்குள் ஹாஜிகள் வெளியேறவும்’ – சவுதி அரேபியா
– MJ றியாத்: இம்முறை ஹஜ் கடமைக்காக 1.4 மில்லியன் வெளிநாட்டினர் சவுதி அரேபியாவுக்குள் பிரவேசித்திருக்கின்றனர். இவர்களுள் அனேகமானவர்கள் ஹஜ் கடமையை முடித்துவிட்டு, உரிய நேரத்தில் தங்களது சொந்த நாடுகளுக்குப் பிரவேசித்துவிடுவர். ஆனாலும் சிலர், வேலைவாய்ப்பைக் கருத்திற்கொண்டு வீசா காலாவதியாகியும் சவுதியில் இருக்க முயற்சிப்பதும் வழமையானவையே.
-
பின்லேடன் உடல் மிதக்காமல் இருக்க 300 இறாத்தல் சங்கிலியை வைத்து கடலில் வீசிய அமெரிக்கா
– AF-90 வாஷிங்டன்: அல் கய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனின் உடலை ஒரு பையில் போட்டு அதில் 300 இறாத்தல் எடை உள்ள சங்கிலிகளை வைத்து கடலில் வீசியதாக முன்னாள் சி.ஐ.ஏ. தலைவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
விசேட தேவையுடையோர் மற்றும் விதவைகளுக்கான OSAவின் உழுஹிய்யா நிகழ்வு
– OSA காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு (OSA) கடந்த நான்கு வருடங்களாக வருடந்தோரும் நடாத்தி வருகின்ற உழுஹிய்யா நிகழ்வின் தொடரில் இன்று(7) காலை அமைப்பினது தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் சங்கைக்குரிய உலமாக்கள் மற்றும் பிரமுகர்களின் பங்கு பற்றுதலுடன் மிகவும் சிறப்பான நடைபெற்றது.
-
‘LED’ விளக்கைக் கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு
– SHM ஸ்டொக்ஹோம்: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நீல ஒளியை உமிழும் டயோடுகளை (அதாவது லெட் எனப்படும் LED விளக்குகள்) கண்டுபிடித்ததற்காக இந்தாண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு மூன்று விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-
பலத்த சண்டையின் பின்னர் சிரியா-துருக்கியின் முக்கிய போடரைக் கைப்பற்றியது இஸிஸ்
– MJ கோபேன்: சிரியாவுக்கும் துருக்கிக்கும் இடையிலே அமைந்துள்ள கோபேன் எனும் முக்கிய இடத்தை இஸிஸ் அமைப்பினர் தற்பொழுது கைப்பற்றியுள்ளனர். இச்சண்டையின் பின்னர் அங்குள்ள 3 மாவட்டங்களையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
-
ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு புத்தளம் மனிதவள நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இரத்த தானம் நிகழ்வு
புத்தளம்: ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு புத்தளம் மனிதவள நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இரத்த தானம் நிகழ்வு நேற்று (2014.10.07) செவ்வாய்க்கிழமை புத்தளம் நுஹ்மான் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்ற போது இரத்த தானம் செய்பவர்களையும், வைத்தியர்கள் பரிசோதிப்பதையும், படங்களில் காணலாம்.
-
கிழக்கு மண்ணின் எமது ஊடக உறவுகளை காத்த மண்ணில் ஒன்றாக காணக்கிடைப்பது பெரும் பாக்கியமே….
-டீன்- பைரூஸ்- காத்தான்குடி; புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு, காத்தான்குடி முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெறவுள்ள கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல்களுக்கான சகல ஏற்பாடுகள் யாவும் அல்லாஹ்வின் உதவியோடு புர்த்தி செய்யப்பட்டுள்ளதாக போரத்தின் தலைவா் சமூக சேவையாளர் கௌரவ அல்ஹாஜ் மௌலவி SMM முஸ்தபா(பலாஹி) JP தெரிவித்தார்.