காத்தான்குடியில் இடம்பெற்ற கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல்

kmf media– எம்.எச்.எம். அன்வர்

காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல் காத்தான்குடியில் 07-10-2014 ம் திகதி மிக விமர்சையாக இடம்பெற்றது. வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்விற்கு போரத்தின் தலைவர் எஸ்.எம்.எம்.முஸ்தபா பலாஹி தலைமை வகித்தார்.

அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை, மாவட்டங்களைச்சேர்ந்த 100 க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டதுடன், ஆரம்பமாக காத்தன்குடி முதலாம் குறிச்சி மீரா ஜூம்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்ற நிருவாகத்தினருடனான சந்திப்பில் கலந்துகொண்டு 1990 இல் இடம் பெற்ற பள்ளிவாயல் சூட்டு சம்பவம் தொடர்பாகவும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் காத்தான்குடி மக்கள் எதிர்நோக்கும் கல்வியில் பின்தங்கிய நிலை அதாவது உயர்பதவிகளில் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் வெற்றிடம் தொடர்பாகவும் பள்ளிவாயல் தலைவரும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவருமான எம் ஐ எம் சுபைர் மற்றும் செயலாளர் AGM அனீஸ் ஆகியோரினால் விளக்கமளிக்கப்பட்டது.

media kmf

தெடர்ந்து ஹூசைனியா பள்ளிவாயலுககும் குழுவினர் சென்று சூடு இடம்பெற்ற இடங்களைப்பார்வையிட்டனர்.

அடுத்து காத்தான்குடி நகர சபைக்கு சென்ற குழுவினர் நகர சபைத்தலைவர் எஸ்எச்எம் அஸ்பரினால் வரவேற்கப்பட்டு தான் கடமையை பொறுப்பேற்றபோது காத்தான்குடி மக்கள் குப்பை பிரச்சினை காணிப்பிரச்சினை மடுவப்பிரச்சினைகளை புரஐக்டர் மூலம் விளக்கமூட்டி தற்போதய நவீன முறைகளுடன் தொடர்பான வேலைத்திட்டங்களை தெரிவித்தார் அத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகள் மற்றும் தமிழ் நிருவாகப்பயங்கரவாதம் தற்போது இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

kmf media

அடுத்து பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்ஏ எம் ஹிஸ்புள்ளாவினல் ஆரம்பித்து வைக்கப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியினையும் குழுவினர் பார்வையிட்டனர் இங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் வரவேற்றதுடன் கல்லூரி தொடர்பான கற்கை நெறிகள் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாகவும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மாகாண சபை உறுப்பினர் பதிலளித்தார்.

அடுத்து நிகழ்வாக காத்தான்குடி அல்மனார் அறிவியியற் கல்லூரியினையும் பார்வையிட்டனர் செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ எல் எம் மும்தாஸ் மதனி இவர்களை வரவேற்றதுடன் இங்கும் கல்லூரி தொடர்பான மற்றும் கற்கை நெறிகள் தொடர்பாக விளக்கத்தினை செயலாளர் ஏ எல் எம் மும்தாஸ் மதனி பணிப்பாளர் எம் ஐ எம் நௌசாத் விளக்கமளித்தனர்.

media

இறுதியாக கிழக்கு மாகாண ஊடக குழுவினர் கடற்கரையில் அமைந்துள்ள ஜூமைறா பெலசுக்கு சென்றதுடன் அதிதிகளின் வருகையுடன் கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு தங்கள் கருத்துக்கள் கிடைத்த அனுபவங்கள் சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துகொண்டதுடன், கவிதை பாட்டு அறிவுக்களஞ்சியம கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர் அமைப்பு ஒன்றினை உருவாக்குவதன் அவசியம் தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

Published by

Leave a comment