மாஞ்சோலை: மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு மாஞ்சோலை மீள்குடியோற்ற மக்களுக்கு தற்காலிக குடிசைகள் அமைப்பதற்கான உதவிகள் மீள்குடியேற்ற அமைச்சினால் இன்று மாலை வியாழன் (09) வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களுடைய வேண்டுகோளின் அடிப்படையில் மீள்குடியோற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களினால் இவ் உதவிகள் வழங்கப்பட்டன.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் மாஞ்சோலை மீள்குடியோற்ற கிராமத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.
இதன் போது ஓட்டமாவடி பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர்,பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி, செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு மீள் குடியோறியுள்ள ஓரு குடும்பத்திற்கு தலா 12தகரம்,08பேக் சீமொத் வீதம் 35 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment