ஊடகங்களுக்கு உதவ ஹஜ் மாதத்தினை நல்லதொரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்வோம்

காத்தநகர் டீன்பைரூஸ்-

mediaமுஸ்லீம் ஊடகங்களும் அதன் தேவைப்பாடுகளும்.

உலக வரலாற்றில் நாட்டில் வாழும் ஒரு சமூகம் நிம்மதி,சந்தோசத்துடனான வாழ்வு,பாதுகாப்பு,அதி கூடிய சுதந்திரத்துடன் வாழ்வதற்கும், வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் ஊடகம் (MEDIA) மிக காத்திரமான பங்களிப்பினை செய்து வருகிள்றது.
உலகம் ஓரலவு நிம்மதியாக உருளுவதற்கு ஊடகம் மிகப் பிரதானமான பங்கினை வகிக்கின்றது என்றால் அது மிகையாகாகது. ஊகடம் என்பது சக்தி மிக்கது. ஊடகத்தில் தாக்கம் ஒரு நாட்டின் ஆட்சியினையே ஆட்டம் காணவைத்து விடும். அந்தவகையில் இன்று உலகலாவிய ரீதியில் ஊடகம் இல்லா தேசம்,நாடு,நகரம்,கிராமத்தினைக் காணமுடியாது என்ற அளவுக்கு இன்று  ஊடகம் வைரஸ் போல் பரவி பரந்து,விருந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றதினைக் காணக் கூடியதாக உள்ளது.;

இன்று முஸ்லிம் நாடுகளில் இடம் பெற்று வரும் பல்வெறு பட்ட உள்நாட்டுப் பிரச்சினைகள்,அப்பிரச்சினைக்கான பின்னனி, ஒரு நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் சூழ்ச்சிக் கும்பலின் மறுமுகம் அதன் யதார்த்த நிலமைகளையெல்லாம் படம்பிடித்துக் காட்டுவதற்கும், அதன் உண்மை நிலையினை வெளியுலகிக்கு கொண்டுவருவதற்கம் ஊடகம் இன்று பிரதானமான பங்கினை வகிக்கின்றன என்ற உண்மையினை யாரும் மறுக்க முடியாது.

அந்த வகையினில் எமது தாய் நாடான இலங்கையினைப் பொறுத்த மட்டில் இன்று அல்லாஹ்வின் அருளினால் பல்வேறு பட்ட ஊடகங்கள் தனது காத்திரமான பங்களிப்பினை செய்து வருகின்றன. சுில ஊடகங்கள் உலக நோக்கோடு இயங்கினாலும் அவைகளும் இன்று சமூக நோக்கோடு இயங்க தன்னை மாற்றிக் கொண்டிருப்பதினை அவதானிக்க முடிகின்றது.

அச்சு,இலத்திரணியல் ஊடகங்கள்,வாராந்த.மாதாந்த பத்தரிகைகள்,யு-டியுப்,டுவிட்டர்,முகநூல், சஞ்சிகைகள்,என பல முஸ்லிம் ஊடகங்கள் நாட்டினில் நடமாடுவதினால்,இயங்குவதினால் இலங்கையினைப் பொறுத்தமட்டினில் இன்று முஸ்லிம் சமூகம் ஓரலவு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிள்றது எனலாம். ஏதிரிகள் கூட முஸ்லிம் அரசியல் வாதிகள் அல்லது முஸ்லிம் தலைமைகளைக் கண்டு அச்சுவதினை விட ஊடகத்திற்கு அச்சுகிறார்கள் என்று தைரியமாக கூற முடியும்.

ஏனவேதான் முஸ்லிம் ஊடகங்களின் தேவைப்பாடுகளும் அதன் அவசியமும் பல தலைமைகளால் இன்று நன்கு உணரப்பட்டுள்ளதினை அவதானிக்க முடிகின்றது.

ஹஜ் மாதம் நபி இப்றாஹீம்(அலைஹி) அவர்களின் தியாகத்தினைக் அடிப்படையாக கொண்ட மாதம். இம்மாதத்தினை நல்லதொரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி நம் நாட்டிலுள்ள முஸ்லிம் ஊடகங்களை இணங்கண்டு அவற்றின் தேவைப்பாடுகளை அறிந்து அதற்கு ஏற்றவகையில் ஊடகங்களுக்கு உதவுதற்கு ஹஜ் மாதத்தினை நல்லதொரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்வதற்கு அரசியல் மற்றும் ஊர்த்தலைமைகள் முன்வர வேண்டும்.

Published by

Leave a comment