புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி மீராவோடை மீரா ஜூம்ஆப்பள்ளிவாயல் நிருவாகம் கௌரவிப்பு

meeravodai– எம்.ரீ.எம். பாரிஸ்

ஓட்டமாவடி: இவ்வருட 2014 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கல்வி கோட்ட பாடசாலை மாணவர்கள் மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயல் நிருவாகத்தினரால் இன்று (10) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையினை தொடர்த்து பெரும் திரளான மக்கள் மத்தியில் இம் மாணவர்கள் பாராட்டி கௌவிக்கப்பட்டனர்.

மீராவோடை மீராஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவரும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளருமான கௌரவ கே.பீ.எஸ்.ஹமீட் தலைமையில் இடம் பெற்ற இவ்வைத்தின் போது பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினரும் கிழக்கு பல்கலை கழக சிரோஷ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி அவர்கள் கல்வியின் சிறப்பு குறிந்தும் எதிர்கால மாணவர் சமூகத்தை எவ்வாறு வழிநடாத்துவது தொடர்பான விளக்கவுரை வழங்கினார்.

meeravodai

இவ்வைபவத்தின் போது மீராவோடை மீரா ஜூம்ஆப்பள்ளிவாயலை அன்மித்த பாடசாலைகளான மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம்,மாஞ்சோலை அல்-ஹிரா வித்தியாலயம்,மீராவோடை அமீர் அலி வித்தியாலயம்,பதுரியா நகர் அல்-மினாவித்தியாலயம், செம்மண்னோடை அல்-ஹம்றா வித்தியாலயம் உள்ளீட்ட ஆறு பாடசாலைகளில் இருத்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைத்த 44 மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் நினைவுச்சின்னம் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

meeravodai (2)

இதன் போது பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்கள் ஓட்டமாவடி பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர்,சபை உறுப்பினரான அன்வர் ஆசிரியர் உள்ளீட்ட பாடசாலையின் அதிபர்கள் பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்கள் புத்திஜீவிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இது மீராவோடை மீரா ஜூம்ஆப்பள்ளி வாயல் நிருவாகத்தினரது ஓர் வரலாற்று சிறப்பு மிக்க செயற்பாடாகும் குறிந்த பள்ளி வாயல் நிருவாக சபையினரால் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பட்ட சமூக பணிகளின் தொடரில் கல்விக்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

student meeravodai

Published by

Leave a comment