கொழும்பு: வீட்டுப்பாவனை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 250 ரூபாவினால் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று முதல் இந்த விலைக்குறைப்பை அமுல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதி அமைச்சின் அதிகாரிக்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளார்.
மக்கள் வேண்டுகோளுக்கு அதீத அக்கறையுடன் கவனம் செலுத்தும் தலைவர் என்ற வகையில் ஓய்வூதிய தினத்தை அனுஷ்டித்த நேற்றைய தினத்தில் களனி வெதமுல்ல ஓய்வூதியக்காரர்களின் விடுமுறை விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வைபவத்தில் கலந்துகொண்டு அங்கு மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று உடனடியாகவே சமையல் எரிவாயு விலையைக் குறைக்கும் தீர்மானத்தை அறிவித்தார்.
நாட்டில் அனைத்துப் பிரஜைகளுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் அரசாங்கத்தின் நோக்கத்திற் கிணங்க அதனைச் சாத்தியமாக்கும் வகையில் உடனடியாகவே நடைமுறைக்கு வரும் வரையில் இந்த சமையல் எரிவாயுக்கான விலைக்குறைப்பு இடம்பெற்றுள்ளது. அண்மையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது. இதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த நாட்டு மக்கள் சமையல் எரிவாயுக்கான விலையையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவரை தயவாய்க் கேட்டுக்கொண்டனர்.
அந்த வேண்டுகோளுக்கும் இணங்கவே சமையல் எரிவாயுவின் விலையைக் குறைத்ததாக ஜனாதிபதி அவர்கள் ஓய்வூதிய தினவைபவத்தின்போது மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உடனடியாகவே நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உரிய பணிப்புரைகளை வழங்கியதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க சமையல் எரிவாயு விலையை 250 ரூபாவால் குறைத்துள்ள மையானது மக்களின் வாழ்க்கைச் சுமை யைக் குறைத்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முக்கியமான தீர்மானமாகும். இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கமைய கடந்த மாதம் மின்சாரக் கட்டணக் குறை ப்பும், மண்ணெண்ணை மற்றும் டீசல், பெற்றோல் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி நேற்று அறிவித்த காஸ் விலை குறைப் பினையடுத்து தற்போது கொழும்பில் 2396 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 12.5 கிலோ எடைகொண்ட காஸ் சிலிண்டர் ஒன்று 2146 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.
Published by

Leave a comment