சனா: யெமன் நாட்டின் தலைநகர் சனா உள்ளிட்ட 2 இடங்களில் நிகழ்த்தப்பட்ட வெவ்வேறு தற்கொலைப்படை தாக்குதல்களில் மொத்தம் 70 பேர் பலியாகியுள்ளனர். யெமன் தலைநகர் சனாவை அண்மையில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் கைப்பற்றினர். அதே நேரத்தில் கிளர்ச்சியாளர்களும் இந்த நகரைக் கைப்பற்ற போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஷியா பிரிவு ஆதரவாளர்கள் அல்-தஹ்ரிர் சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது திடீரென்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இச்சம்பவத்தில் 50 பேர் பலியான நிலையில் பலர் காயமடைந்துள்ளனர். தென்கிழக்கு யெமனில் உள்ள ஹத்ரமாவ்ட் மாகாணத்தில் நடைபெற்ற மற்றொரு தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Published by


Leave a comment