Category: Your Kattankudy
-
எங்களை விரட்டி மீண்டும் அனாதைகளாக்க முயற்சிக்க வேண்டாம்: மீள் குடியேற்ற சிகரம் மக்கள் வேண்டுகோள்
முகம்மட் சஜீ சிகரம்: மட்டக்களப்பு சிகரம் மீள் குடியேற்றக்கிராம அபிவிருத்தி தொடர்பாக அன்மையில் தேசியப் பத்திரிகையொன்றில் வெளியான செய்தி குறித்து சிகரம் மக்கள் தமது வன்மையான கண்டனத்தினை தெரிவித்துக் கொள்வதாக அப்பகுதி ஜூம்ஆப் பள்ளிவாயல் நிறுவாகம் தெரிவித்தனர்.
-
கிழக்கில் தொடரும், ஹஜ்ஜு யாத்திரை, விடுமுறை சர்ச்சைக்கு விரைவில் தீர்வு
கரீம் ஏ. மிஸ்காத் அம்பாறை: ஹஜ் யாத்திரைக்காக நாட்டுக்கு வெளியே விடுமுறையில் செல்ல, சம்பள மற்ற விடுமுறைகோரும் அதிபர் ஆசிரியர்களுக்கு, அவ்விடுமுறையை அனுமதிக்க, தாபனவிதிக்கோவைக்கு முரணாக, விடுமுறை கோரப்படும் நாட்களின் அளவு, சேமித்த பிணி விடுமுறை கோரும், நாட்டில் வேறெந்த மாகாணத்திலும் இல்லாத விதிகளை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர்; தன்னிச்சையாக அமுல்படுத்தியிருந்தார்.
-
எல்.-நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கை எதிர்நோக்கும் அதிக மழை!
பரிஸ்: கிழக்கு பசிபிக் கடற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு எல்-நினோ என பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, 2015 மற்றும் 2016ல் எல்-நினோவின் பாதிப்பு மத்திய பகுதி நாடுகளில் தீவிரமாக இருக்கும். எல்.-நினோ காலநிலை மாற்றத்தினால், தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் அதிகளவில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், இம்முறை மழைக்காலம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரை நீடிக்கலாம் என்றும் ஐ.நா எச்சரித்துள்ளது.
-
தாஜூடீன் கொலை விசாரணையும் தடுக்கும் மர்ம சக்தியும்
கொழும்பு: றகர் விளையாட்டு வீரர் வாசிம் தாஜூடீன் கொலை தொடர்பாக மேற்கொண்டு வரும் விசாரணைகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஒரு மர்மான சக்தி ஈடுபட்டு வருவதாக காவற்துறை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு தரப்பில் இருந்து கொடுக்கப்படும் கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே காவற்துறையினர், தாஜூடீனின் இந்த மர்ம கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக அமீரலி நியமனம்
கொழும்பு: புதிய அரசாங்கத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவட்ட அபிவிருத்தி குழுக்களுக்கான தலைவர் பதவிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படவில்லை.நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சியாக விளங்கினாலும் அரசாங்கத்துடனும் ஜனாதிபதியுடனும் நல்லிணக்கத்துடனேயே அது செயற்பட்டு வருவதாக பார்க்கப்படுகின்றது.
-
சவுதியில் முதல் முறையாக பெண்கள் வாக்களிப்பு
றியாத்: சவுதி அரேபியாவில் பெண்கள் முதல் முறையாக வாக்களித்துள்ளனர். வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி, முதல் முறையாக பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று நாடு முழுவதும் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், சுமார் ஆறாயிரம் ஆடவர்களுடன், ஏறத்தாழ ஆயிரம் பெண்களும் போட்டியிடுகின்றனர்.
-
தூய தேசத்தை நோக்கிய தொடரும் பயணம்..
ஜுனைட் எம். பஹ்த் காத்தான்குடி: தற்காலத்தில் நமது முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சமூக,கலாச்சார ,சமய சீர்கேடுகள், போதை பொருள் பாவனை போன்றவை தொடர்பாக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்திட்டங்களை ” தூய தேசத்தை நோக்கிய பயணம் ” என்ற சீர்திருத்த பயணத்தை முஹாசபா மீடியா நெட்வொர்க் முன்னெடுத்து வருகின்றது.
-
ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவரை எதிர்க்கட்சியினர் தாக்க முயற்சித்த சம்பவம் வரலாற்றில் முதற்தடவை!
கொழும்பு: ரக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் பற்றிய விசாரணைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் உரையாற்ற முயன்ற வேளையில், அங்கு ஏற்பட்ட அமளிதுமளி காரணமாக சபை நடவடிக்கைகள் இரண்டு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்டன. தாஜுதீனின் மரணம் தொடர்பில் தான் உரையாற்ற முற்பட்டபோது, அருகில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூன்று பேர் தன்னைத் தாக்க வந்ததாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
ஷிஆ விவகாரம்: மீராவோடை மீரா ஜூம்ஆப்பள்ளிவாயல் பொது மக்களுக்கு விடுக்கும் அறிவித்தல்
எம்.ரீ.எம். பாரிஸ் ஓட்டமாவடி: ஓட்டமாவடி பிரதேசத்தில் அமைந்துள்ள மீராவோடை மன்பஉல்ஹூதா அறபுக்கல்லூரி ஷீஆக் கொள்கையினை போதிக்கும் கல்லூரியாக உள்ளதுடன் இஸ்லாமிய அகீதா கோட்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக பிரதேச மக்களும்,பள்ளிவாயல் நிருவாகங்களும்,அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்குடா கிளை நிருவாகமும் குற்றம் சாட்டியுள்ளது.
-
பாராளுமன்றில் முஜிபுர் எம்.பி மீது தாக்குதல்
“றக்பீ வீரர் வசிம் தாஜுடீனின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இந்த சபையில் அமர்ந்திருக்கின்றனர்” கொழும்பு: வசிம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அமளிதுமளி ஏற்பட்டதை அடுத்து, பாராளுமன்ற நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உரை நிகழ்த்தியதன் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் தனது உரையை ஆரம்பித்தார்
-
அம்பாறை, பொத்துவில், ஹிஜ்ரா நகர் மக்கள் தண்ணீருக்கு தவிப்பு
கரீம் ஏ.மிஸ்காத், எம்.அனஸ்-பொத்துவில் அம்பாறை: பொத்துவில், ஹிஜ்ரா நகர் மக்கள், குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கலால் தினமும் தண்ணீருக்காகத் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அதனை சாதகமாக்கி, பிழைப்பு நடாத்தஒரு கூட்டம் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். பொத்துவில் பிரதேசத்திலுள்ள 27 கிராம சேவகர் பிரிவுகளில் 26ஆவது பிரிவான ஹிஜ்ரா நகர், பொத்துவிலிருந்து சுமார் 9கிலோமீற்றர் தொலைவில் வடமேற்காய் அமைந்துள்ளது.
-
பிரான்சில் அதிகரிக்கும் அதிரடி சோதனைகள்
பரிஸ்: பிரான்ஸில் அவசர நிலைப் பிரகடனம் தொடரும் சூழலில், அந்நாட்டில் மக்களின் அதுவும் குறிப்பாக முஸ்லிம்களின் சிவில் உரிமைகள் பரவலாகப் பாதிக்கப்படும் என ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர் அந்நாட்டில் அவசர சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.