சவுதியில் முதல் முறையாக பெண்கள் வாக்களிப்பு

saudi electionறியாத்: சவுதி அரேபியாவில் பெண்கள் முதல் முறையாக வாக்களித்துள்ளனர். வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி, முதல் முறையாக பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று நாடு முழுவதும் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், சுமார் ஆறாயிரம் ஆடவர்களுடன், ஏறத்தாழ ஆயிரம் பெண்களும் போட்டியிடுகின்றனர்.

எனினும் தேர்தல் பிரச்சாரங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி பெண் வேட்பாளர்கள் ஆண் வாக்காளர்களுடன் நேருக்கு நேர் பேசுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.சவுதியில் தனியாக பெண்கள் வாகனங்கள் ஓட்டிச் செல்ல அனுமதி இல்லாத காரணத்தால், வாடகைக் கார் நிறுவனமான உபேர் நிறுவனம் பெண்களுக்கான அறக்கட்டளை அமைப்பு ஒன்றுடன் இணைந்து, பெண் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல இலவச பயண வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.

saudi election
வுதி அரேபியாவில் பெண்கள் முதல் முறையாக வாக்களித்துள்ளனர்

Published by

Leave a comment