“றக்பீ வீரர் வசிம் தாஜுடீனின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இந்த சபையில் அமர்ந்திருக்கின்றனர்”
கொழும்பு: வசிம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அமளிதுமளி ஏற்பட்டதை அடுத்து, பாராளுமன்ற நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உரை நிகழ்த்தியதன் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் தனது உரையை ஆரம்பித்தார்
றக்பீ வீரர் வசிம் தாஜுடீனின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இந்த சபையில் அமர்ந்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்தே பாராளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்ற சம்பவம் தொடர்பில் சபையில் உரை நிகழ்த்த கூடாது என எதிர்தரப்பினர் கூச்சலிட்டுள்ளனர்.எனினும், இந்த சம்பவம் தொடர்பில் சபையில் கருத்து தெரிவித்த அதிகாரம் உள்ளதாக பிரதி அமைச்சர் சுஜிவ சேனசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார். அதனை பொருட்படுத்தாத எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு சபையில் அமளிதுமளியை ஏற்படுத்தியுள்ளனர்.
Leave a comment