கிழக்கில் தொடரும், ஹஜ்ஜு யாத்திரை, விடுமுறை சர்ச்சைக்கு விரைவில் தீர்வு

  • கரீம் ஏ. மிஸ்காத்

Eastern_Province_Flag_(SRI_LANKA)[1]அம்பாறை: ஹஜ் யாத்திரைக்காக நாட்டுக்கு வெளியே விடுமுறையில் செல்ல, சம்பள மற்ற விடுமுறைகோரும் அதிபர் ஆசிரியர்களுக்கு, அவ்விடுமுறையை அனுமதிக்க, தாபனவிதிக்கோவைக்கு முரணாக, விடுமுறை கோரப்படும் நாட்களின் அளவு, சேமித்த பிணி விடுமுறை கோரும், நாட்டில் வேறெந்த மாகாணத்திலும் இல்லாத விதிகளை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர்; தன்னிச்சையாக அமுல்படுத்தியிருந்தார்.

இதனால், போதிய சேமித்த பிணி விடுமுறை இல்லாத, கிழக்கு மாகாணப் பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு, தமக்கு விதியான ஹஜ் கடமையை, சம்பளமற்ற விடுமுறையில் நாட்டுக்கு வெளியே சென்று நிறைவேற்ற முடியாத நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவ்வாறு போதிய பிணி விடுமுறையின்றிச் சென்றவர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டும் வருகின்றனர்.

தாபனவிதிக் கோவையின் அத்தியாயம் 23:1 மற்றும் 23:2 உபவிதிகளுக்கு முற்றிலும் முரணாக, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் ஜீஃஈபிசிஃஎஃஅனுமதி ஆம் இலக்க 2010.03.31ஆம் திகதிய கடிதத்தின் பிரகாரம் அமுல்படுத்தப்பட்டுவரும் இந்த முரண்பட்ட விதிகள், இன்றும் அமுலில் உள்ளதால், அதன் பாதிப்புக்கள் இன்னும் தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

மஹிந்தவின் ஆட்சியில் தொடர்ந்ததை, மைத்ரியின் நல்லாட்சியிலும் தொடர அனுமதிக்கமுடியாது. ஹஜ் விடுமுறை சர்ச்சைக்கு விரைவில் தீர்வு வேண்டும். ஆதலால் குறித்த திகதிய முரண்பட்ட விதிகள் முற்றாக நீக்கப்படல் வேண்டும். பதிலாக தாபனவிதிக் கோவையின் குறித்த உபவிதிகள் முழுமையாக அமுல்படுத்தப்படல் வேண்டும்.அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிவாரணம் வேண்டும்.

முதலான கோரிக்கைகள் அடங்கிய மகஜர், முதலமைச்சரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து, அதனை அமுலாக்கு வதற்குத் தேவையான அறிவுறுத்தல்களுக்கான அறிக்கையை கல்விச் செயலாளரூடாக, மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் கோரியுள்ளார்.

இந்த மகஜர், அண்மையில் கிழக்குமாகாண முதலமைச்சரைச் சந்திக்கச் சென்ற குழுவினதும், மாகாண சுகாதார அமைச்சரினதும் முன்னிலையில், முதலமைச்சரின் காரியாலயத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத்தலைவர் மன்சூர் அனஸ் தெரிவித்தார்.

Published by

Leave a comment