Category: Your Kattankudy
-
இணையத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை
லண்டன்: மொபைல் தொலைபேசி மற்றும் இணையம் போன்றவை சக்தி வாய்ந்த கருவிகள் மட்டுமல்ல அவை பெரிய ஆயுதங்களாகவும் இருக்கக்கூடும். ஐ.நா மன்றம் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உருவாகும் வன்முறையைப் பற்றி எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது. இந்த வன்முறை உடல் ரீதியான துஷ்பிரயோகத்தைப் போலவே அதே அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது . குறிப்பாக உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் தொழில் நுட்பம் நுழையக்கூடிய இந்த நேரத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று ஐ.நா கூறுகிறது.
-
ஒலுவில் கைத்தொழில்பேட்டைக்கு ரூ.100 மில்லியன் ஒதுக்கீடு
அபூ அஸ்ஜத் ஒலுவில்: ஒலுவிலில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பொறியியல் கற்கைப் பிரிவை மூடுவதாக வெளிவந்த செய்தியினையடுத்து,அப்பிரதேசத்தில் கைத்தொழில் பேட்டையினை ஆரம்பிக்க தமது அமைச்சு 100 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் இன்று இடம் பெற்ற போது,விவாதத்துக்கான பதிலுரையில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
-
மின்னல் ரங்காவின் “கள்ள” தொடர்புகள் அம்பலம்!
கொழும்பு: மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் அமைச்சர்கள் கை கட்டி, வாய் பொத்தி நின்றார்களே ஒழிய தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையையும் பெற்றுக் கொடுத்து இருக்கவில்லை என்று சக்தி ரி. வியின் மின்னல் நிகழ்ச்சி மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றார் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா. குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கு மஹிந்தவின் தமிழ் அமைச்சர்கள் உருப்படியான நடவடிக்கை எடுத்து இருக்கவில்லை என்று இவர் பகிரங்கமாக குற்றம் சுமத்தி வருகின்றார்.
-
குவைத்தில் மாபெரும் இரத்த தான முகாம்
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 11ம் ஆண்டு “மாபெரும் இரத்த தான முகாம்” இன்ஷா அல்லாஹ்…. 18/12/2015 வெள்ளிக்கிழமை, பகல் 1:30 மணி முதல்… மத்திய இரத்த வங்கி, ஜாபிரிய்யா, குவைத். அனைவரும் உதிரம் கொடுப்போம்! மனித நேயம் மலர துணை நிற்போம்!! மேலதிக விபரங்களுக்கும், பதிவு செய்வதற்கும்…. (+965) 9787 2482 குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
-
வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது
கொழும்பு: இன்று (15) அரச மற்றும் தனியார் துறையில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தேசிய தொழிற்சங்கங்களின் சம தலைவரும், ஒருங்கிணைப்பாளரும், அரசாங்க தாதியர்கள் சங்கத்தின் தலைவருமான சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வறிவிப்பை வெளியிட்டார்.
-
ஐஎஸ்-இன் பெயரில் தான் தாக்கப்பட்டதாக பரிஸ் ஆசிரியர் கூறியது ‘ஒரு பொய்’
பரிஸ்: பரிஸில் இஸ்லாமிய அரசு அமைப்பின் பெயரில் தன் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியதாக பாலர் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் முன்னர் கூறியிருந்த தகவல், ஒரு பொய் என்பதை அவரே ஒப்புக்கொண்டிருப்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.தான் வகுப்பறையில் தனியாக இருந்தபோது, கத்திரிக்கோல் மற்றும் அட்டை பெட்டிகளை வெட்டும் கத்தியால் தன்னை ஒருவர் தாக்கியதாக ஆசிரியர் கூறியதை அடுத்து, வடக்கு பரிஸ் புறநகர்ப் பகுதி எங்கிலும் தாக்குதலாளியைத் தேடி தேடுதல் வேட்டை ஒன்றும் நடத்தப்பட்டது.
-
பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் ஏற்பாட்டில் தொழுகை பயிற்சி முகாம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை தமது மாணவர்களை தொழுகை பற்றி அறிவூட்டுவதையும் அதனை நடைமுறை ரீதியாக பழக்குவதையும் இலக்காக கொண்டு தொழுகை பயிற்சி முகாம் ஒன்றை கடந்த 10 வியாழக்கிழமை காத்தான்குடி ஜூமைறா பெலஸ் கடற்கரை வளாகத்தில் நடாத்தியது.
-
தாஜூதீனுக்கு நடந்தது என்ன…? CCTV பதில்!
கொழும்பு: பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீன் கொலையுடன் சம்பந்தப்பட்ட சீசிடிவி காட்சிகளின் முக்கிய பகுதிகள் ஊடகங்களுக்கு கசிந்துள்ளது. வசிம் தாஜூதீன் 2012ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி இரவு கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, அவரது காருக்குள் போட்டு , நாராஹேன்பிட்டி சாலிகா விளையாட்டு மைதானத்தின் மதில் சுவர் அருகே காருக்கு தீவைத்து, படுகொலை செய்துள்ளதாக ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
-
“உம்மா நான் உம்றாக்கு போறன்”!!!
உம்மா நான் உம்றாக்கு போறன் -தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஓயாமல் போறன். சும்மா நான் ஜொலிக்காகப் போறன்-இங்கு ஷோ காட்டி வாழாட்டி சுற்றத்தார் மதிக்கார்.
-
வடக்கில் அதிகரித்துவரும் விகாரைகளும் மஸ்ஜிதுகளும்!
யாழ்ப்பாணம்: போருக்குப் பின்னரான கடந்த 5 ஆண்டுகளில் வடக்கு மாகாணத்தில் புதிதாக 18 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.2009 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 29 விகாரைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 47ஆக அதிகரித்துக் காணப்படுகின்றது என வடக்கு மாகாண புள்ளிவிபரக் கையேட்டின் விபரங்கள் தெரிவிக்கின்றன. 2009 ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 373 இந்து ஆலயங்கள் காணப்பட்ட நிலையில் 2014ஆம் ஆண்டு அது 2 ஆயிரத்து 541ஆக அதிகரித்துள்ளன. 221…
-
நீரில் மூழ்கி மரணித்த நிமாலி – நிர்மலா
புத்தளம்: ரம்பொடை ஒயாவில் நீராடச் சென்ற இளம் பெண்கள் இருவர் நீரில் அடித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று நேற்று ஞாயிறு மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொத்மலை பொலிசார் தெரிவிக்கின்றனர். ஆர்.எஜ்.ஷகீலா நிமாலி வயது 33 ,டி.நிர்மலா மானெல் வயது 33 ஆகிய இருவருமே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சிறிய கிலேத்தேவ, முகுனு வட்டவல, அலாவத்தை, புத்தளம் என்ற விலாசத்தை கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.புத்தளம் அலாவத்த பகுதியில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த ஒரு…
-
பாராளுமன்றத்தில் பிரதமர் கூறியுள்ள விடயங்கள்
கொழும்பு: அரசாங்க ஊழியர்களுக்கு 10,000ரூபா கொடுப்பனவை, அடுத்த வருடம் முதல் மூன்று கட்டங்களாக அவர்களது அடிப்படை சம்பளத்தில் இணைக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதன்படி அடுத்த ஜனவரி மாதமளவில் 2000 ரூபாவை அடிப்படைச் சம்பளத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் ஆற்றும் விஷேட உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.