பரிஸ்: பிரான்ஸில் அவசர நிலைப் பிரகடனம் தொடரும் சூழலில், அந்நாட்டில் மக்களின் அதுவும் குறிப்பாக முஸ்லிம்களின் சிவில் உரிமைகள் பரவலாகப் பாதிக்கப்படும் என ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர் அந்நாட்டில் அவசர சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.
நீதிமன்ற உத்தரவின்றியே வீடுகளில் அதிரடிச் சோதனை செய்யும் விசேட அதிகாரம் பிரஞ்சு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.