கொழும்பு: றகர் விளையாட்டு வீரர் வாசிம் தாஜூடீன் கொலை தொடர்பாக மேற்கொண்டு வரும் விசாரணைகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஒரு மர்மான சக்தி ஈடுபட்டு வருவதாக காவற்துறை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு தரப்பில் இருந்து கொடுக்கப்படும் கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே காவற்துறையினர், தாஜூடீனின் இந்த மர்ம கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் பல்வேறு ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்ட தரப்பினர் இன்னும் அந்த பதவிகளில் இருப்பதால், கொலை தொடர்பான விசாரணைக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தாஜூடீன் உடலின் மாதிரிகள் காணாமல் போனதாக அண்மையில் நீதிமன்றதில் தெரிவிக்கப்பட்டது.
Leave a comment