Category: Your Kattankudy
-
பரீட்சைகள் நாளை திட்டமிட்டபடி நடைபெறும்
கொழும்பு: கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.புஸ்பகுமார தெரிவித்தார்.தொழிற் சங்கங்களினால் நாளை மேற்கொள்ளவுள்ள வேலை நிறுத்த போராட்டத்தினால் பரீட்சைகளை பிற்போட முடியாது எனவும் குறிப்பிட்டார்.
-
வரலாற்றில் முதல் தடவையாக நாடு தழுவிய அரச மற்றும் தனியார் வேலை நிறுத்தம் இன்று நள்ளிரவு முதல்!!
கொழும்பு: வரலாற்றில் முதல் தடவையாக நாடு தழுவிய அரச மற்றும் தனியார் வேலை நிறுத்தம் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டமானது கடந்த மாதம் 21ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து வரவு செலவுத்திட்டமானது பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஒவ்வொரு அமைச்சுகளுக்குமான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதங்கள் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-
5 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 55 வயதுடைய குடும்பஸ்தர் கைது
வவுனியா: வவுனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 55 வயது குடும்பஸ்தர் ஒருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர். வவுனியா, வேலன்குளம், மடுக்குளம் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 5 வயது சிறுமியே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை (12) சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாதவேளையில், குறித்த வீட்டிற்குச் சென்ற அப்பிரசேசத்தைச் சேர்ந்த 55 வயதான குடும்பஸ்தர் ஒருவர் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளதாக தெரியவருகிறது.
-
மூதூரில் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்
மூதூர்: மூதூரில் கைவிடப்பட்டுள்ள வீதி விஸ்தரிப்புப் பணியை துரிதப்படுத்துமாறு கோரி இன்று திங்கட்கிழமை முதல் கால வரயரை இன்றிய கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்று வருகின்றது. மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி சந்தியில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கதிகமானோர் கலந்து கொண்டு இரண்டு வருடகாலமாக கைவிடப்பட்டிருக்கும் பெரிய பால சந்தியிலிருந்து நகரத்தை நோக்கிச் செல்லும் வீதி விஸ்தரிப்புப் பணியை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
-
பசில் ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை
கொழும்பு: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்க ஆகியோர் மீது கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே இவர்கள் மீதான விசாரணை கடுவெல நீதிமன்றத்திலேயே இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது ஆறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
-
வில்பத்து விவகாரம்; இனவாதிகளின் முகத்தில் “அறைந்த” ராஜித
ரஸீன் ரஸ்மின் கொழும்பு: வடக்கு முஸ்லிம்கள் காடு அழிப்பவர்கள், சட்டவிரோதமா சமூகத்தின் தவறான கண்ணோட்டத்திற்கும், அந்த மக்களின் பிரதிநிதியான ரிசாத் பதியுதீன் மீதான இனவாதப் பார்வைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைச்சர் ராஜிதவின் கருத்துக்கள் அமைந்துள்ளன. கடந்த வாரம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடகவியலாளர் ஒருவர் வில்பத்து வனப்பகுதியை அமைச்சர் ரிசாத் அழித்து வருகிறார்.
-
சவூதியில் வல்லுறவுக்கு உள்ளாகிய பெண் புகார்
கொழும்பு: சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக சேவையாற்றிய வீட்டின் உரிமையாளர் மற்றும் அந்த வீட்டில் வசித்து வந்த மேலும் இருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணொருவர் இலங்கை திரும்பிய பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். குறித்த பெண் பணியாற்றிய வீட்டின் உரிமையாளர், உட்பட மூவரும் பல முறை இந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
-
ரி-20 உலகக் கிண்ணம்: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மேலதிகமாக 5000 ஆசனங்கள்!
தர்மசலா: இந்தியாவில் ரி-20- 2016-உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் தர்மசலாவில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு ரசிகர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் அங்குள்ள மைதானத்தில் கூடுதலாக 5000 ஆசனங்கள் மேலதிகமாக போடப்படவுள்ளது இப்போட்டித் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை உட்பட எட்டு மைதானங்களில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
-
சவுதி தேர்தல்:முதல் முறையாக பெண் ஒருவர் தேர்வு
றியாத்: சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் நேரடித் தேர்தல் மூலம் மக்கள் பணிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.சனிக்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிட்ட, சல்மா பிண்ட் ஹிஜாப் அல்-ஒடேய்பி எனும் பெண்மணி மக்கா மாகாணத்திலுள்ள முனிசிபல் கவுன்சில் ஒன்றில் உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
ரஷ்ய மனநல மருத்துவமனையில் தீ விபத்து: 22 பேர் பலி!
மொஸ்கோ: ரஷ்யாவின் தென்பகுதியிலுள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 22 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.அங்கிருந்த மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்தில் இருபதுக்கும் அதிகாமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
-
தொகுதிவாரி தேர்தல் சீர்திருத்தம் முஸ்லிம் மக்களுக்கும் ஆபத்தானது
கொழும்பு: வட்டாரத் தேர்தல் முறை சம்பந்தமாக நாளை நடைபெறவுள்ள சர்வ கட்சி மா நாட்டின்போது வட்டார முறை என்ற மஹிந்த சிந்தனையை நீக்கி, விகிதாசார தேர்தல் முறையே தொடர்வதற்கு சிறுபான்மை கட்சிகள் ஒற்றுமையாக வலியுறுத்த வேண்டும் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தலின் போது வட்டார தேர்தல் முறை என்பது கிழக்கு மாகாணத்துக்கு வெளியே உள்ள சிறு பான்மை மக்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என்பது அனைத்து கட்சிகளாலும்,…
-
கம்பியா இஸ்லாமிய நாடாக பிரகடனம்
Bபன்ஜூல்: கம்பியாவின் அதிபரான யஹ்யா ஜம்மா மேற்கு ஆபிரிக்காவின் தனது சிறிய நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக பிரகடனம் செய்துள்ளார்.இது தனது நாட்டின் பெரும்பான்மையான முஸ்லிம்களின் மதத்தின் அடிப்படையிலும், தமது காலனித்துவ கடந்த காலத்தை ஒழிக்கும் நோக்கிலும் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.ஆனால் அனைத்து குடிமக்களின் உரிமைகளும் மதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.