கொழும்பு: வரலாற்றில் முதல் தடவையாக நாடு தழுவிய அரச மற்றும் தனியார் வேலை நிறுத்தம் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டமானது கடந்த மாதம் 21ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து வரவு செலவுத்திட்டமானது பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஒவ்வொரு அமைச்சுகளுக்குமான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதங்கள் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வரவு செலவுத்திட்டத்தினால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாடு தழுவிய ரீதியில் பாரிய போராட்டமொன்றை நாளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. நாளை இடம்பெறவுள்ள இந்த போராட்டமானது அனைத்து தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கூட்டாக முன்னெடுக்கபோகும் மிகப் பெரிய போராட்டமாக கருதப்படுவதுடன், 1980ஆம் ஆண்டிற்குப் பிறகு முன்னெடுக்கவுள்ள பாரிய போராட்டமாகவும் கருதப்படுகின்றது.
அத்துடன், அரச வங்கிகள், மருத்துவ சங்கங்கள், போக்குவரத்து சங்கங்கள், ரயில்வே தொழிற்சங்கம், ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
இதேவேளை இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் வாகன கோட்டா, அரச சேமலாப நிதி மற்றும் ஊழயர் நம்பிக்கை நிதியம், சம்பளப் பிரச்சனை, புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து நடைமுறைகள் மற்றும் புகை பரிசோதனை ஆகிய பல கோரிக்கைகளை முன் வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கவுள்ளது.
Published by

Leave a comment