ரஷ்ய மனநல மருத்துவமனையில் தீ விபத்து: 22 பேர் பலி!

russia fireமொஸ்கோ: ரஷ்யாவின் தென்பகுதியிலுள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 22 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.அங்கிருந்த மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்தில் இருபதுக்கும் அதிகாமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

நாட்டின் தென் பகுதியிலுள்ள வாரந்ஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்த மனநல மருத்துவமனை, முழுமையாக மரப் பலகையினால் கட்டப்பட்டிருந்தது .இந்த விபத்தில் கட்டடம் முழுமையாக அழிந்துள்ள நிலையில், விபத்திற்கான காரணம் இன்னமும் தெளிவில்லாமல் உள்ளது. ரஷ்யா முழுவதிலும் அரச நிறுவனங்கள் பலவற்றில் சமீபத்தைய வருடங்களில் ஏற்பட்ட தீ விபத்துக்களினால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

russia fire

Published by

Leave a comment