பசில் ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

basil bazilகொழும்பு: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்க ஆகியோர் மீது கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே இவர்கள் மீதான விசாரணை கடுவெல நீதிமன்றத்திலேயே இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது ஆறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் கீழ் லஞ்சம் வழங்கலில் ஈடுபட்டமை மற்றும் மஹிந்த ராஜபக்சவின் உருவம் பொறித்த பிரசார கருவிகளை விநியோகித்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இதேவேளை திவிநெகும நிதியில் இருந்து 29 மில்லியன் ரூபாய்களை பிழையான கையாண்டமை தொடர்பிலும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Published by

Leave a comment