5 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 55 வயதுடைய குடும்பஸ்தர் கைது

child-abuse2[1]வவுனியா: வவுனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 55 வயது குடும்பஸ்தர் ஒருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர். வவுனியா, வேலன்குளம், மடுக்குளம் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 5 வயது சிறுமியே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை (12) சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாதவேளையில், குறித்த வீட்டிற்குச் சென்ற அப்பிரசேசத்தைச் சேர்ந்த 55 வயதான குடும்பஸ்தர் ஒருவர் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் பெண்கள், சிறுவர் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்றையதினம் (13) சந்தேகநபரான 55 வயது குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published by

Leave a comment